சகட்டுமேனிக்கு
பொருள்
சகட்டுமேனிக்கு(உ)
- ஒட்டுமொத்தமாக, பாகுபாடின்றி, எந்தவித வித்தியாசமும் பாராமல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- without any discrimination
விளக்கம்
பயன்பாடு
- நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். (புண்படுத்தாத நகைச்சுவை என்பது, ஜெயமோகன்)
- வடிவ ஒழுங்கு கூட இல்லாமல் களிமண்ணை வரட்டி போல தட்டி சுட்டு எடுத்து சகட்டுமேனிக்கு அடுக்கி கட்டியிருக்கிறார்கள் (இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ, ஜெயமோகன்)
- இலக்கிய மதிப்பீட்டின் படி, அளவீட்டின்படி எது சிறந்தது? எது அதை விட சிறந்தது? எது அதை விட அதை விட சிறந்தது என்று ஒப்பிடுகின்ற தன்மை எனக்கு மிக பிற்பாடுதான் வந்தது. அதனால் நான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் படித்தேன். (தீராநதி நேர்காணல், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சகட்டுமேனிக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +