சல்லி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சல்லி (பெ)
- சிறுகாசு,, சில்லறை
- கல் முதலியவற்றின் உடைந்த துண்டு
- பொடிக் கல்
- கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு
- ஆபரணத் தொங்கல்
- மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான்
- துவாரம்
- பொய்
- போக்கிலி
- எல்லரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- small coin; previously, small copper coin, fractional part of a larger coin, 1/12 anna
- small pieces of stone or glass, potsherd
- small chips, as of stone; rubble
- small flat shells, used for lime
- short pendant in ornaments, hangings
- a thin, emaciated person
- perforation, hole (Colloq.)
- falsehood
- villain, black-guard
- kind of drum
விளக்கம்
பயன்பாடு
- அவர் மகா கஞ்சன். ஒரு சல்லிக் காசு கூடச் செலவு செய்யமாட்டார்.
- சல்லிக்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சாலை.
- சல்லி வேர்
(இலக்கியப் பயன்பாடு)
- எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8)
- முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சல்லி--- DDSA பதிப்பு + வின்சுலோ +