தொங்கல்
ஒலிப்பு
|
---|
பொருள்
தொங்கல் (பெ)
- தொங்குகை.
- தொங்கற் பொருள்
- ஆபரணத் தொங்கல்
- காதணி வகை
- தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி
- அலங்காரத் தூக்கம்,தொங்கல்
- பருத்த பூமாலை
- ஐம்பாலுள் ஒருவகை
- ஆண்மக்களின் மயிர்
- மயில் தோகை
- பீலிக் குஞ்சம்
- வெண்குடை
- சேறாடி, சத்திரம், சாமரம் முதலிய விருது
- பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி
- வயிற்றுத் தங்கல்
- விழக்கூடிய நிலையில் ஒட்டிநிற்கை
- முனை
- மூலை தொங்க லுக்குத் தொங்கல்
- பெண்களின் மேலாக்குச் சீலை
- முந்துகை
- காமத் தொங்கல் பிறப்பு உறுப்பை மறைக்கும் வகையில் ஆலிலை வடிவில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் ஆபரண்ம்
- ஆபரணக் கடைப்பூட்டு
- குறை முப்பது ரூபாய் தொங்கல்
- ஆதரவின்மை. ஆசாமி பாடு தொங்கல்தான். (பேச்சு வழக்கு)
- ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- hanging
- anything pendent, hangings
- pendent part of an ornament
- an ear ornament
- outer end of a woman's cloth either hanging or brought round the neck; end of a man's cloth thrown over the shoulder
- decorative hangings, as of cloth; festoons
- thick garland
- a mode of dressing woman's hair, one of aim-pāl, q. v.
- man's hair
- tail of a peacock
- peacock's feathers, as arranged for a fan or a parasol
- white umbrella, as an emblem of royalty
- insignia of royalty
- cloth spread above the water-pots while carrying water to wash a corpse
- any undigested matter sticking to the bowels
- anything sticking and hanging ready to fall
- projection, cape, headland
- street corner, end of a street, extremity
- cloth worn as upper garment by women
- going in advance
- clasp of an ornament
- shortage
- helplessness
- dependence
பயன்பாடு
- அலங்காரத் தொங்கல் - ornamental hanging
- ஆபரணத் தொங்கல் - pendant part of an ornament
- தொங்கல் போடு - மேலாக்கு இடு
- ஐம்பதுக்கு இன்னும் ஒரு வருடம் தொப்பை சரிந்துவிட்டது. கண்ணுக்கு கீழே கனமான தொங்கல் நீர் கோத்த கண்கள். உப்பிய கன்னங்கள் தவளைத்தாடை. முன்வழுக்கை. கருமையான நிறம். அவனை கண்ணாடியில் பார்க்கவே அவனுக்கு பிடிக்கவில்லை (பழையமுகம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:தொங்கு - காதணி - தொங்கட்டான் - சிமிக்கி - லோலாக்கு