சாற்று
சாற்று(வி)
பொருள்
- விளம்பரப்படுத்து
- வில் (= விற்பனை செய்)
- சொல், அறிவி
- நிறை (நிறைத்தல்)
- உணர்த்து
- அடி (அடித்தல்), முழங்கு
மொழிபெயர்ப்புகள்
- market, advertise ஆங்கிலம்
- sell
- recite, announce, broadcast
- fill up
- make someone realize, understand, sensitize
- fix (secure), hit
விளக்கம்
- சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள். ஒரு சாமி]க்கு கூர்ம பதக்கம் சாற்றி என்று செய்தித்தாளில் பார்க்க நேர்ந்தது. கூர்ம பதக்கம் சாத்தி என்றே எழுத வேண்டும். இவ்வாறே விழாக்களில் "பொன்னாடை போற்றி' என்று சொல்லுகிறார்கள். பொன்னாடை (?) போர்த்தி என்றே சொல்ல வேண்டும். உச்சரிப்பில் அச்சம் வருமெனில் அணிவித்து மகிழ்கிறோம் என்று சொல்லலாமே! (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 17 ஏப்ரல் 2011)
பயன்பாடு
- பறை சாற்றினான் = பறையறிவித்தான்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +