சுபமஸ்து
பொருள்
சுபமஸ்து(பெ)
- கடிதம் முதலியவற்றின் முதலிறுதிகளில் 'மங்கள முண்டாகுக' என வாழ்த்துதலைக் குறிக்கும் ஒரு தொடர்மொழி; மங்கலச்சொல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- an expression meaning 'Let there be auspiciousness',used at the beginning or end of a writing
விளக்கம்
பயன்பாடு
- தம்மு படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இப்படி கண்கலங்கிய த்ரிஷா, இயக்குனர், ஒளிப்பதிவாளர் கால்களில் விழுந்து வணங்கி விடைபெற்றாராம். இந்த படத்தோடு த்ரிஷா சினிமாவிலிருந்து விலகப் போகிறார் என்ற யூகங்களை கொளுத்திப் போட ஆரம்பித்திருக்கிறது தெலுங்குப் படவுலகம். அதை உறுதி செய்யும் விதத்தில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம் அவர். தமிழில் சமரன் படத்திற்கு பிறகு வேறு படங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்கள். வேறென்ன? எல்லாம் கல்யாண சுபமஸ்துதான்! (தமிழ் சினிமா, )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுபமஸ்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +