தமிழ்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

தொகு
  • சேதி, பெயர்ச்சொல்.
  1. செய்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    இந்தச் சேதி யுரைக்க... (இராமநாடகம்-பாலகாண்டம், 13)
  2. தன்மையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    வாவறூங்குகின்ற சேதியென்ன... (உத்தர காண்டம்; ராமாயணம்-சம்புவன் வதைப்படலம், 32)
  3. வடநாடுகளுள் ஒன்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    சேதிப்பெருமான் சிசு பாலன்... (மகாபாரதம்-திரௌபதி மாலை இட்ட சருக்கம், 42)
  4. சேதிநாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரில்... (பெரியபுராணம்-மெய்ப்பொருள் நாயனார் புராணம், 1)
  5. சேதியை ஆண்ட ஓர் அரசபரம்பரையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    சேதிமா மரபோன்... (மகாபாரதம்-குருகுலச் சருக்கம், 104)
  • சேதி, வினைச்சொல்.
  1. வெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7)
  2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50)
  3. உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    அவர்களைச் சேதித்தனர்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. news, occurrence
  2. nature, manner
  3. cut off, divide, sever, dissect
  4. destroy
  5. amputate


இலக்கிய மேற்கோள்கள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேதி&oldid=1891819" இலிருந்து மீள்விக்கப்பட்டது