தம்
- த் + அம் = தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தம்(பெ)
- இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
- உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை
- மூச்சு
- புகைப் பிடிக்கையில் புகையை ஒருமுறை உள்ளிழுத்து வெளிவிடுதல்
- சதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- flexional increment generally used along with the nouns of third person plural; oblique of தாம்
- holding the breath especially during hard tasks such as lifting something heavy, or going under water
- breath
- puff
- hundred
விளக்கம்
பயன்பாடு
- அவர் தம் பிடித்து அந்தக் கனமான மூட்டையைத் தூக்கினார்.
- அவர் தம் பிள்ளைகளை மிகவும் நேசித்தார்.
- ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம் பிள்ளை தானாக வளரும் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).
- உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் (ஔவையார்).
(இலக்கணப் பயன்பாடு)
- தாம் - மூச்சு - மூச்சடக்கு - புகைப்பிடி - தம்மடி - தம் பிடி - தமது
ஆதாரங்கள் ---தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +