தராதரம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धराधरा--த4ராத4ரா--மலை என்னும் பொருளுக்கு மூலச்சொல்
தராதரம் , (பெ)
- மலை
- அந்தஸ்து (உள்ளூர் பயன்பாடு)
- தரம்,
- நிலை
- ஏற்றத்தாழ்வு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- mountain
- status, position
- distinction of rank, place, class or other particulars
விளக்கம்
- தரம் என்பதன் இரட்டை
பயன்பாடு
- நாம் ஏன் கண்டவனையும் தலைவராக்குகிறோம் ? அவன் தகுதி, தராதரம், ஒழுக்கம், கல்வி இது பற்றி எதாகிலும் யோசிக்கிறோமா? (தமிழர்களும், சினிமா நடிகர்களும் பற்றி, நரேந்திரன், திண்ணை)
- பிச்சை போடுவதற்கே பாத்திரமறிந்து போட வேண்டும் என்போம் நாம். அப்படி இருக்கையில் தராதரம் அறியாமல் கடன் தருவது அழகல்ல. 2006 ஆம் வருடம் கடன் பெற்றவர்களில் 39 சதவீதம் பேர் தங்களது உண்மையான வருமானத்தை உயர்த்திச் சொல்லி அதிகக் கடன் பெற்றிருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. (திவாலாகும் அமெரிக்கா நிதி நிறுவனங்கள், செல்லமுத்து குப்புசாமி, உயிர்மை)
- இரட்டைக் குழந்தையின் தாய்க்கு எந்தக் குழந்தை ஒசத்தி? தராதரம் பார்க்கமாட்டாள் தாய், (கர்நாடகம் தமிழகம், ரஜித், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தராதரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +