தமிழ் தொகு

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள் தொகு

  • திமில், பெயர்ச்சொல்.
  1. கூனல்;கூன்
  2. பிசல்
  3. பியல்; எருத்தின் முரிப்பு
    திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய. 144)
  4. திமிலம்
    1. திமிலம்¹ (பெரிய மீன்) (எ. கா.) திமிங்கலம்
      திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபுராணம். உமை வரு. 20)
    2. திமிலம்² (பேரொலி)
    (எ. கா.)
    திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாசகம் 29, 4)
    போரில் குண்டு வெடித்து, பேரொலி கேட்டது.
  5. திமிர்வாதக்காரன்
  6. சோம்பேறி
  7. வேங்கை (மலை.)
  8. மீன்படகு, கட்டுமரம்
    திண்டிமில் வன்பரதவர் புறநானூறு. 24)
  9. கட்டுமரம், மரக்கலம், கப்பல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. hump
  2. shoulder
  3. nape of the neck; hump, as of a bullock
  4. A kind of big fish or sound
  5. paralytic patient
  6. sluggish person
  7. east Indian kino (Pterocarpus marsupium (தாவரவியல் பெயர்))
  8. catamaran, small boat
  9. vessel, ship

இலக்கிய மேற்கோள்கள் தொகு

  • அகநானூறு
    • பழம் திமில் கொன்ற புது வலை பரதவர்
    • கொடு திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
    • நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
    • திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
    • திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
    • கடு செலல் கொடு திமில் போல
    • வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் திண் திமில்
    • வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
  • கலிங்கத்துப்பரணி
    • இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த கால்
    • நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
  • குறுந்தொகை
    • பல் மீன் வேட்டத்து என்னையர் திமில்
    • கொடு திமில் பரதவர் கோட்டு மீன் எறிய
  • மதுரைக் காஞ்சி: நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
  • நற்றிணை
    • திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி
    • எந்தை திமில் இது நுந்தை திமில் என
    • திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப
    • திண் திமில் விளக்கம் எண்ணும்
    • திண் திமில் பரதவர் ஒள் சுடர் கொளீஇ
  • பரிபாடல்: புனல் பொருது மெலிந்தார் திமில் விட
  • புறநானூறு
    • முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
    • திண் திமில் வன் பரதவர்
  • சிலப்பதிகாரம்
    • விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கம் உம்
    • திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே
    • ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்
  • கந்தபுராணம்
    • திமில் இடுகின்ற தொல் சேடி மாருடன்
    • இளம் திமில் உடைச் செம் கண் ஏற்றொடும்
  • தேவாரம்:
    • முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை
அத்தன் எந்தைபிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே
  • திருவாசகம்
    • செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
  • திருவிளையாடற்புராணம்:
    • விடுத்து விண் தொடு திண் திமில் விடையவன் கோயில்
    • செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்

சொல்வளம் தொகு

திமில்வாழ்நர் - திமிலகுமிலம் - திமிலர் - திமிலி - திம்மலி - திமிலிடுதல் - திமிசு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திமில்&oldid=1634749" இலிருந்து மீள்விக்கப்பட்டது