தென்றல்(பெ)

 1. இதமான மென்காற்று
 2. தென்காற்று
தென்றல்:


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. pleasant, gentle breeze
 2. south wind, balmy breeze from the south
விளக்கம்
 • தென், தென்றி - தெற்கு
 • தமிழில் பருவ காலங்கள் ஆறு வகைப்படும்; இந்த ஆறு வகையில் இளவேனில் என்பதும் ஒன்றாகும். இளவேனில் (வசந்த)காலத்தில் வீசும் ஒரு சுகமான காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர்.
பயன்பாடு
 • செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)
 • நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே (பாசமலர் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)
 • பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
 • தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

(இலக்கியப் பயன்பாடு)

 • வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
 • வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தென்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காற்று - தென்றி - தெற்கு - தென்னல் - மந்தமாருதம் - மென்கால்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தென்றல்&oldid=1968412" இருந்து மீள்விக்கப்பட்டது