பராரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பராரி(பெ)
- சொந்த ஊரில் வாழமுடியாமல் நிலபுலங்களை விட்டு (பிழைப்புக்காக) வெளியேறியவர்
- ஓடிப்போனவர்;
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- நானும் சரவணனும் சென்னையில் நன்றாக வாழ்கிறோம் என்பதை எங்களது வீடுகளுக்குத் தொலைபேசியில் சொல்லியபோது அவர்களிடமிருந்து அதை மகிழ்வாக ஏற்றுக்கொண்ட தொனியைக் காணாமல் இருந்தோம். "பிள்ளைகள் இரண்டும் சென்னை நகரத்தில் பராரியாகவே திரிகின்றன" என அவர்களின் உள்மனம் எங்கள் தொலைபேசி உரையாடலை உணர்ந்திருக்கலாம். (நடைவண்டி நாள்கள், ஞாயிறு கொண்டாட்டம், தினமணி)
(இலக்கியப் பயன்பாடு)
- ஏழை பராரியாவான், பராரி பட்டினியால் சாவான்! (வால்டேர் வீசிய வெடிகுண்டு. அண்ணா)
- ->
உயிர்பிழைத்தால் போதுமென்றே ஓடி வந்தோர் ஊன்றவில்லை மதீனாவில் வேர் பிடித்து! பயிர்தழைப்ப தெவ்வாறு? பராரி யானோர் பலம்பெறுவ தெப்போது? பதைத்தார் அண்ணல்! -நாயகம் ஒரு காவியம், மு.மேத்தா
- பராரி (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---பராரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +