பாவைக்கூத்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாவைக்கூத்து(பெ)
- பொம்மலாட்டம்; பொம்மையாட்டம்
- கூத்துப் பதினொன்றனுள் அவுணர்மோகித்து விழும்படி கொல்லிப்பாவைவடிவு கொண்டுதிருமகள் ஆடிய ஆடல். (சிலப். 6, 61.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- puppet show; puppet dance, puppetry
- dance of Lakṣhmi when She assumed the form of kollippavai, fascinated the Asuras and made them fall down insensible
விளக்கம்
பயன்பாடு
- ராமாயண பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை என் பால்யவயதில் பலமுறை பார்த்திருக்கிறேன். பத்துநாட்கள் ஊரிலே தங்கி பாவைக் கூத்து நிகழ்த்துவார்கள். பொம்மலாட்டத்தில் ஒருவகையிது. தோலில் சித்திரங்கள் எழுதி அதை விளக்கு வெளிச்சத்தில் காட்டி நிழல் உருவங்களாகத் திரையில் தோன்றும். பாவைக்கூத்தின் பிரதான கதை ராமாயணமே. (நாரத ராமாயணம், எஸ்.ராமகிருஷ்ணன் )
(இலக்கியப் பயன்பாடு)
- பாவை - கூத்து - பொம்மலாட்டம் - தெருக்கூத்து - பொம்மை - நிகழ்த்துகலை - #
ஆதாரங்கள் ---பாவைக்கூத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +