புழுகுபூனை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புழுகுபூனை, பெயர்ச்சொல்.
- (புனுகு+பூனை)
விளக்கம்
தொகு- புனுகு பூனை ஓர் இரவுநேர உயிரினமாகும்...பொதுவாக பூனையைப்போன்றத் தோற்றம்கொண்டவையானாலும் மூக்கு, வாய்ப்பகுதிகள் நீண்டு கீரிப்பிள்ளையைப்போன்று இருக்கும்...இவைகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும் ஆஃப்ரிக்க வகையேகுறிப்பாகப் பேசப்படுகிறது...இவற்றின் உடலிலிருக்கும் ஓரு சுரப்பி புனுகு என்னும் நறுமணைப்பொருளை உற்பத்திச் செய்து சிறுநீருடன் வெளியேற்றுகிறது...இந்தப்புனுகு வாசனைப்பொருட்களைத் தயாரிக்க பயனாகிறது...புனுகை இப்பூனைகளைக் கொன்று அல்லது புனுகு தரும் சுரப்பிகளை அகற்றி அவற்றிலிருந்து எடுத்தனர்... இந்தப்பிராணிகள் உயிருடன் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட சுரப்பிகளை சுரண்டி புனுகை எடுக்கிறார்கள்...சமீபகாலமாக இரசாயன புனுகுவகைகளும் வந்துவிட்டதால் இந்த உயிரினங்களை புனுகிற்காகத் துன்புறுத்துவதும் குறைந்துவருகிறது...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +