பேசரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பேசரி(பெ)
- மூக்கணி வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A kind of nose-screw
விளக்கம்
பயன்பாடு
- கூட்டத்திலிருந்து எண்ணை படிந்த பேசரியும் , இறுக இழுத்து கட்டிய கூந்தலில் மல்லிகையும், மடிசாருமாக ஒரு அம்மாள் இடையில் குழந்தையுடன் வழி பிளந்துவந்து ‘ அய்யோ , ஏன்னா இங்கேல்லாம் வரேள் ? உங்களுக்குத்தான் ரத்தத்த பாத்தாலே அல்பசங்கை வந்துடுமே . ஏன் தடுமாறரேள் , பாத்ரூமுக்கு அந்தப்பக்கமா போங்கோ. வாசனை வரது பாத்தேளா , அத வச்சு கண்டுபிடிச்சா என்ன ? ‘ என்றாள். (நான்காவது கொலை!!! -2, ஜெயமோகன்)
- நீலப் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டிகையிலும் காதுகளில் தோடுகளிலும் மூக்கில் பேசரியிலும் ப்ளூஜாகர் வைரங்கள் மின்னுவது தெரிந்தது (மயில்கழுத்து, ஜெயமோகன்)
- விரல்கள் அவள் மூக்கை நெருடின. அவளுக்கும் ஒரு மூக்குத்தி இருந்தது. வைரக்கற்கள் பதித்த எட்டுக்கல் பேசரி. (ஒட்டக சவாரி, சிறுகதை, அம்பை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பேசரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மூக்கணி - காதணி - கழுத்தணி - காலணி - மூக்குத்தி