பேச்சு:கொண்டைக் குயில்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இப்பறவையைக்கண்டதும் அதிர்ச்சி கலந்த வியப்பு. நிறைய நேரங்களில் காகங்களை இரசிப்பேன். அவைகளின் பல்வேறு குணங்கள், இயல்புகள் என்னை அவைகளை, நுணுக்கமாகக் கவனிக்கத்தூண்டும்.
அப்போது, காக்கைகளின் நிறத்தை மனதில் மாற்றி, இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் நினைத்திருக்கிறேன். அதுயாதெனில், மேற்புறம் குடைபோன்று கருப்பு நிறத்தினையும், அடிப்புறம் வெண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதே அது.
உங்களின் கொண்டைக் குயில், அதே போல கறுப்பு - வெள்ளை நிறத்தோடு இருப்பது கண்டு வியந்தேன். என் கனவு நனவு ஆனது போல..
இயற்கை மிகப்பெரிய இரசிகனும், ஓவியனும் அன்றோ!த*உழவன் 15:29, 23 மே 2010 (UTC)
- இப்பறவையை நான் மிக அண்மையில் கண்டுற்றேன்; அதாவது, லைலா புயல் வருவதற்கு ஓரிரு நாள்கள் முன்னர்!! --பரிதிமதி 18:58, 23 மே 2010 (UTC)
- ஆகா! இப்பறவை, பருவமழை வருவதை முன்னறிவிக்கும் என்பது உண்மையாக இருக்கும். இந்தியாவின் ஒருகோடியில்(சிம்லா) வாழ்பவர், மறுகோடியில் வாழும் நமக்கு படமெடுத்துள்ளார். தமிழகத்திற்காக நானும் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. மற்றொரு நாளில், நிழற்படக்கருவி பற்றி தொடர்பு கொள்கிறேன். வணக்கம்த*உழவன் 05:48, 24 மே 2010 (UTC)