மனு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனு (பெ)
- குறை, புகார் முதலியன தெரிவித்து எழுதும் கடிதம்
- வேலை முதலியன கோரி விண்ணப்பிக்கும் படிவம்; விண்ணப்பம்
- வார்த்தை
- சோழ மன்னனின் பெயர்
- மனுவின் இந்து தருமநூல்; பதினெட்டனுள் ஒன்றான மனுதர்ம சாத்திரம்
- மந்திரம்
- மனிதன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- petition, request; prayer
- application as for a job
- word; submission
- an ancient Chola king
- A Sanskrit textbook of Hindu law ascribed to Manu, one of 18
- incantation, mystical verse or formula
- man
விளக்கம்
பயன்பாடு
- தேர்தல் வேட்பு மனு - nomination application as a candidate in an election
- கருணை மனு - petition for mercy
- அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று (திரைப்பாடல்)
- அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும் (உரைப்பாயிரம், பரிமேலழகர் உரை, திருக்குறள்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமை யொன்றினையும் (தாயு. எங்குநிறை. 8)
- மனுவொன்று பேசுவானே (இராமநா. கிஷ். 9)
- மனுநூற் றொடைமனுவாற் றுடைப்புண்ட தெனும் வார்த்தை (பெரியபு. மனுநீதி. 37).
- நெடுமறை மனுக்கள் கூறி (கந்தபு. திருக்கல். 70)
- மனுவாய்த் தவஞ்செய்வாரின் (பாரத. அருச்சுனன்றவ. 38)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விண்ணப்பம் - படிவம் - மனு தர்மம் - # - #