சுமார் ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடிய ஒரு கடற்மீன்..சற்று வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் உலகெங்கும் காணப்படுகிறது...முதுகுப்புறம் விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்புக்கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடப்படுகிறது...இந்த மீனினத்தில் பல வகைகளுள்ளன...அதிக அளவாக சுமார் 90 கிலோ வரை இறைச்சியையுடையது..எனினும் நீளம் மற்றும் எடையில் பலவேறு வேறுபாடுகள் கொண்டனவையாக உள்ளன...மிக்கச் சுவையுள்ள இறைச்சியாதலால்,இந்த மீன் பிடிபட்டால் நல்ல விலைக்கு விற்கப்பட்டு, மீனவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைகிறது...தமிழகத்தில் தூத்துக்குடி கடற்பிரதேசத்தில் அரிதாக சாம்பற் நிறமும், ஆறு முதல் ஏழடி நீளமுள்ள மயில் மீன்கள் பிடிபடுகின்றன...