ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) முடி

  1. பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
  2. மாந்தனின் தலையில் உள்ள மயிர்
  3. அரசன் தான் அரச பதவி ஏற்றிருப்பதைச் சுட்டும், தலையில் அணியும் அணிகலன். கிரீடம் = மணிமகுடம். (எ.கா) முடி சூட்டிய மன்னன்.
  4. கயிறு, நூல் போன்ற நீளமான பொருள்களில் பின்னப்படும் அமைப்பு (முடிச்சு).
  5. மலையின் உச்சி. கொடு முடி (கடினமான மலையுச்சி)
  6. பணம் போன்ற ஒன்றை ஒரு துணியில் வைத்து பிணைத்து வைத்த ஒன்று.(பணமுடி= வெகுமதி)

வினைச்சொல்

தொகு

முடி

  • (ஒரு வேலை அல்லது பணியை) நிறைவேற்று. - complete it.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-
1.. hair
2. crown
3. knot
4. peak

சொல்வளம்

தொகு
முடி, முடிதல், முடிவு
முடி, முடித்தல், முடிப்பு
முடியாட்சி
மணிமுடி
(முடி),(முடிவு),(மூடி), (மடி),(அடி),(ஆடி),(இடி),(ஒடி), (ஓடி),(கடி),(குடி),(வடி),(தடி),(தாடி),(கொடி),(கோடி).

பகுப்புவேற்றெழுத்து வேறுபாடுகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடி&oldid=1888070" இலிருந்து மீள்விக்கப்பட்டது