கடி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
உரிச்சொல்
தொகு- பொருள்
பொருள் | ஆங்கிலம் | வழக்கு |
---|---|---|
அச்சம் | frightful | கடுங்கண் யானை |
ஐயம் | doubt | கடுத்தனள் அல்லளோ அன்னை |
கரிப்பு | biter | கடி மிளகு |
காப்பு | protective | கடிகா |
கூர்மை | sharp | வாள்வாய் கடிது |
சிறப்பு | elegance | கடும் புனல் |
புதுமை | innovate | கடித்தளிர் |
மிகுதி | abundance | கடும் புனல் |
முன்தேற்று (சத்தியம் செய்தல்) | pledge | கடுஞ்சூள் தருகுவன் |
வரைவு | retreat | ஊரைக் கடிந்தார் (நீங்கினார்) |
விரைவு | speed | கடிது வந்தார் |
விளக்கம் | bright | கடும் பகல் |
பெயர்ச்சொல்
தொகு
பொருள்
கடி...(பெ)
- வாசனை
- கலியாணம்
- (எ. கா.) கன்னிக்காவலுங் கடியிற்காவ லும் (மணி.18, 98).
- காவல்
- புதுமை
- விளக்கம்
- மிகுதி
- விரைவு
- பூசை
- சிறப்பு
- கூர்மை (திவா.)
- இன்பம் (பிங். )
- ஓசை
- அச்சம்
- அதிசயம் (சூடாமணி நிகண்டு)
- தேற்றம் (நேமி. சொல். 58.)
- சந்தேகம் (தொல்.சொல். 384, உரை.)
- கரிப்பு
- காலம் (பிங். )
- பேய்
- சிறுகொடி (W.)
- பல்லாற்கடிக்கை
- (எ. கா.) நாய்க்கடிக்கு மருந்து
- கடித்த வடு
- விஷக்கடி
- ஊறுகாய்
- அரைக்கடி
- மேகப்படை
- (எ. கா.) இடுப்பிற் கடி வந்திருக்கிறது
- நீக்கம் (பிங். )
- குறுந்தடி (கடிப்பு)
- (எ. கா.) கடிப்புடையதிரும் . . . முரசம் (பதிற்றுப். 84, 1).
- பிரயாணத்தில் எருது குதிரைகளை மாற்றும் இடம். (பேச்சு வழக்கு) ---புறமொழிச்சொல்--உருது--gaḍi
- இடுப்பு
- இரப்போர்கலம்
- காவல்
- காப்பு
- விரைவு
வினைச்சொல்
தொகுஇலக்கணம்
தொகு- "கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆ ஈரைந்தும் பெய்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே" - தொல்காப்பியம் 2-8-86
- "ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே" - தொல்காப்பியம் 2-8-67
பயன்பாடு
தொகு- எம் அம்பு கடிவிடுதும் : (எம் அம்பினை விரைவாக விடுவோம்)
- கடி நுனைப் பகழி : (கூர்மையான நுனியை உடைய அம்பு)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம் (}
- scent, odour, fragrance
- wedding
- protection, safeguard, defence
- newness, modernness
- brightness, transparency
- abundance, copiousness, plentifulness
- speed, swiftness
- worship, homage
- beauty,excellence
- sharpness, keenness
- delight, gratification, pleasure
- sounding, sonorousness
- fear
- wonder, astonishment
- certainty, assurance
- doubt
- pungency
- time
- devil
- small creeper
- biting
- mark or scar of a bite
- poisoning as the result of bites or stings
- pickle
- gall, brasion, being the result of great tightness or rubbing of apparel
- ringworm
- removal, rejection
- drumstick
- stage in a journey, where the horses or bulls of carriages are changed
- waist
- beggar's bowl
(வி)
- {{இந்தி }}
சொல்வளம்
தொகு- கடி, கடித்தல், கடிப்பு
- கடிகை, கடிகாரம், கடிவாளம், கடிநாய்
- கடிபடு
- காக்காக்கடி
- கொசுக்கடி, நாய்க்கடி, பூச்சிக்கடி, காணாக்கடி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- விரைவு