முயற்கொம்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முயற்கொம்பு(பெ)
- இல்பொருள் - உலகில் இல்லாத பொருள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- non-existent thing, unreality (Literally, hare's horns)
விளக்கம்
பயன்பாடு
- நான் பசியோடு இருந்த நாள்கள் என் நினைவில் நிழலாடுகின்றன! மூன்று வேளை உணவென்பதெல்லாம், முயற்கொம்பே! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 23-மார்ச் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
- கான்முயற்கொம்பே யென்கோ (தாயு. தேன்முகம். 1).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முயற்கொம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +