ராகமாலிகை
பொருள்
ராகமாலிகை , (பெ)
- ஒரு பாடலில் பல ராகங்களும் தொடர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- series of ragas in which the successive parts of a song are sung;
விளக்கம்
பயன்பாடு
- ஒரு இசையமைப்பாளருக்கு ராகங்களில் இருக்கும் தேர்ச்சியை அவர் பல்வேறு ராகங்களை மாலையாகக் கோர்த்து உருவாக்கும் ராகமாலிகைகளிலிருந்து கண்டுகொள்ளலாம். ராகங்கள் தனித்தனியாகத் துண்டுதுண்டாகக் கேட்காமலும், அந்தந்த ராகபாவங்களை, ஸ்வரூபங்களைக் கச்சிதமாக வெளிப்படுத்துபவையாகவும் இருக்க வேண்டும். ராகமாலிகைகளை உருவாக்குவதில் தமிழ்த்திரையிசையில் கே.வி.மகாதேவன் ஒரு மாஸ்டர் என்றே சொல்லவேண்டும். (கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும், எஸ்.சுரேஷ், சொல்வனம்)
- “அறுபடை வீடு கொண்ட திருமுருகா” (கந்தன் கருணை) பாடல் ஒரு சம்பிரதாய கம்போதியில் தொடங்குகிறது. உபதேசம் செய்வதற்கு சக்ரவாகம், கடல் கொஞ்சுவதற்கு கானடா, மயில் ஆடும் சோலைக்கு காபி என்று அந்தந்த உணர்ச்சிக்குப் பொருத்தமான ராகங்களைப் போட்டிருப்பார் மகாதேவன். காம்போதி, ஹிந்தோளம், சக்ரவாகம், கானடா, ஹம்சநாதம், நாட்டகுருஞ்சி மற்றும் காபி ஆகிய ஏழு ராகங்களில் வரும் இந்த பாடல் தமிழ்த் திரையிசையில் வந்த மிக சிறந்த ராகமாலிகைகளில் ஒன்று. (கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும், எஸ்.சுரேஷ், சொல்வனம்)
- சங்கராபரணம் படத்தில் அருமையான ஒரு ராகமாலிகையையும் வைத்தார் மகாதேவன். “ராகம் தானம் பல்லவி” என்ற இந்த பாடல் சாருகேசி ராகத்தில் ஆரம்பிக்கிறது. சாரங்கா, கேதாரம், தேவகாந்தரி, காம்போதி என்று திரையிசையில் அவ்வளவாகக் கேட்கப்படாத ராகங்களை நமக்கு ஒரு மாலையாகத் தொகுத்துக் கொடுக்கிறார் மகாதேவன். (கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும், எஸ்.சுரேஷ், சொல்வனம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ராகமாலிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +