வம்சாவளி
வம்சாவளி (பெ)
- ஒரு சந்ததியில் வந்தவர்கள்; சந்ததியினர்
- வம்ச வரிசை; வமிச பரம்பரையைத் தெரிவிக்கும் அட்டவணை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வம்சாவளி = வம்சம் + ஆவளி
- ஆவளி என்றால் வரிசை; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. ('நந்தகுமாரா நந்தகுமாரா:' கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள், தேவமைந்தன்)
பயன்பாடு
- நாம் இன்னும் வம்சாவளி அரசியலை தடுக்க முடியாமல் இருக்கிறோம் (தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும், சின்னக்கருப்பன், திண்ணை)
- சிங்கப்பூரில் சீனர்கள், மலேயர்களைத் தவிர தமிழர், மலையாளி, தெலுங்கர் மற்றும் சீக்கியர் என இந்திய வம்சாவளி மக்களும் வசிக்கின்றனர். அதிலும் தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர். (சிங்கப்பூர் தீபாவளி!, தினமணி, 25 அக் 2009)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வம்சாவளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +