வாராவதி
வாராவதி(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வாராவதி = வார் + வதி
- வார் - water, வதி - way. நீர் மேல் அமைந்த வழி.
- போக்குவரத்துக்காக ஆற்றின் இரு கரைகள், பள்ளத்தாக்கின் இரு புறங்கள் முதலியவற்றை இணைத்துக் கட்டப்படும் வழி அல்லது பாதை
- தெலுங்கில் வாரதி
பயன்பாடு
- ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு; அது நாளடைவில் மக்கள் நாவில் அம்பட்டன் வாராவதியாகி அதிலிருந்து Barber’s Bridge என்று ஆங்கிலச் சொல் உருப்பெற்றது! (மொழி, குமரிமைந்தன்)
- ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் செல்லும் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. (தினமணி, 22 ஆக 2010)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாராவதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +