பொருள்

வித்தகம்,

  1. ஞானம்
  2. கல்வி
  3. பொன்; வித்தம்
    • வித்தகந் தரித்த செங்கை விமலையை (கம்பரா. காப்பு.)
  4. சின்முத்திரை
  5. சாமர்த்தியம்
  6. திருத்தம்
  7. அதிசயம்
  8. பெருமை
  9. நன்மை
  10. வடிவின் செம்மை
  11. சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. knowledge, wisdom
  2. learning
  3. gold
  4. a hand-pose
  5. skill, ability
  6. accomplishment, perfection
  7. wonder
  8. greatness
  9. goodness
  10. regularity, as of form, symmetry
  11. fine, artistic work, minute workmanship


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வித்தகமும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப (கம்பரா. கார்முக. 19)
  • வித்தகத் தும்பை விளைத்ததால் (பரிபா. 9, 68)
  • நூல் புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ் சேர் வரிகள் (சீவக. 1044)
  • குத்துமுளை செறித்த வித்தக விதானத்து (பெருங். இலாவாண. 5, 24)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


வித்தை - வித்தகன் - வித்தம் - வித்யா - வித்வான்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வித்தகம்&oldid=1968732" இலிருந்து மீள்விக்கப்பட்டது