அகப்படு
|
---|
பொருள்
அகப்படு(வி)
- கிடை
- மாட்டு, உட்படு
- சிக்கிக்கொள், உட்சிக்கு
- கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும். (பாரத.கிருட். 174).
- வசப்படு
- ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது.
- உள்ளாகு
- சத்தவிரு டிக்கண மகப்பட . . .முனித்தலைவரும் (உத்தரரா. வரையெடு. 69).
- குறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- be obtained, be found
- be caught or ensnared
- be entangled
- be brought under one's possession or power, become subordinate
- be included
- be diminished, shortened
விளக்கம்
- அகப்படு என்றால் கிடைத்து விடு என்று பொருள். ஒரு பொருளை தொலைத்து விட்டால், அதனை அகப்படுகிறவரை வீட்டில் உள்ளவர்கள் தேடிக்கொண்டு இருப்பார்கள். உதாரணத்திற்கு இந்த வாக்கியங்களை பார்க்கலாம்:
01. நான்கு நாட்களாக தேடிக்கொண்டிருந்த திருடன் அகப்பட்டுக்கொண்டான்; 02. வலைக்குள் நுழைந்த எலி வெளியே வரும்போது அகப்பட்டுக்கொண்டது; 03. காணாமல் போன இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தலையணை அடியில் இருந்து அகப்படும் வரை அவன் தேடிக்கொண்டேயிருந்தான்.
பயன்பாடு
- மங்களநாயகம் தம்பையா எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’ நாவல் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். இந்த நாவலை நான் பலமுறை படிக்கத் திட்டமிட்டு தோற்றிருந்தேன். இதை கடைகளில் வாங்கமுடியாது. நூலகங்களில் அகப்படாது. (இரண்டு பெண்கள், அ.முத்துலிங்கம் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அகப்படு--- DDSA பதிப்பு + வின்சுலோ +