அங்கலாய்
பொருள்
அங்கலாய்(வி)
- வருத்தப்படு; கலக்கமடை; குறையைக் கூறிப் புலம்பு; துக்கி
- பொறாமைப்படு
- இச்சி, ஏங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோயில் வாசலில கால் வைத்ததும் எனக்குப் பகீர் என்றது. கூட்டம் அதிகமாகி நெரிசல் பட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் போய்விடலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் இவ்வளவு தூரம் வந்து ஒரு அர்ச்சனை செய்யாமல் போவதா? மனம் அங்கலாய்த்தது. (சட்டியில் இருந்தால்தானே, காஞ்சனா மணியம், திண்ணை)
- உலகத்தில் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்து இறந்துபோன மூதாட்டி ஜீன் கல்மன்ற். அவர் தனது 122 வது வயதில் மரணமடைந்தார். ஒருமுறை அவர் தன்னை கடவுள் திரும்ப அழைப்பதற்கு மறந்துவிட்டாரோ தெரியாது என்று அங்கலாய்த்தார். (ஆயுளைக் கூட்டுவது, அ.முத்துலிங்கம்)
- ஆடுமறித்தவன் செய்விளையுமா, அங்கலாய்த்தவன் செய்விளையுமா?
(இலக்கியப் பயன்பாடு)
- அங்கலாய்ப்பாளே (இராமநா. ஆரணி. 26)
(இலக்கணப் பயன்பாடு)
- அங்கலாய்ப்பு - புலம்பு - வருந்து - துக்கி - பொறாமைப்படு - ஏங்கு - இச்சி
ஆதாரங்கள் ---அங்கலாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
−