அந்தகன்
பொருள்
அந்தகன்(பெ)
- அழிப்போன்
- எமன்
- குருடன்
- புல்லுருவி
- சவுக்காரம்
- ஓர் அசுரன்
- ஓர் அரசன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- destroyer
- Yama, God of Death, as causing death
- blind man
- soap
- species of loranthus
- name of an Asura
- name of a descendant of Yadu, and ancestor of Kṛṣṇa
விளக்கம்
பயன்பாடு
- கம்பனைப் பார்ப்பது அந்த நூறு பாடல்களைப் பார்ப்பதல்ல. அந்தகன் யானைப் பார்ப்பது போலவும் அல்ல. (காப்பிய இமயம், நாஞ்சில் நாடன்)
- "மாலையில் யாரோ மனதோடு பேச" பாட்டை இசைத்த செல்வி ஸ்வர்ணலதாவை எண்ணி என், விழி மேகங்கள் வெகுண்டு திரண்டு வெந்நீர் மழையைப் பெய்யும்! ஸ்வர்ணலதா என்னும் ஸ்வர ராக தேவதைக்குப், புற்று வைத்ததே முற்று! அந்தகன், அந்தகன்தான்; ஆயினும் கண்ணற்றவனுக்குக் காதுகளுமா அற்றுப் போனது? (வாலியின் நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், 21-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
- இராவணாந்தகனை (திவ். பெரியதி. 2, 3, 7)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அந்தகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குருடன் - எமன் - புல்லுருவி - சவுக்காரம் - # - #