விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/சூன்

« 2011/மே

(Recycled மே)

சூன்

(Recycled சூன்)

2011/சூலை »

(Recycled சூலை)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

 

தினம் ஒரு சொல்   - சூன் 1
தியாலம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

நேரம் - காலம் - மணி - தருணம் - சமயம் - நிமிடம் - நொடி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 2
அகராதி பிடித்தவன் (பெ)

1.1 பொருள் (பெ)

  • அதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  • very learned person, used ironically

1.3 விளக்கம்

  • அகராதி படித்தவன் என்பது மருவி அகராதி பிடித்தவன் என்றாகியது

1.4 பயன்பாடு

  • அவன் பெரிய அகராதி பிடித்தவன், அவனோடு பேசாதே
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 3
வற்றல் (பெ)
 
மிளகாய் வற்றல்

1.1 பொருள் (பெ)

  1. வறண்டது
  2. வறண்ட / உலர்த்திய / காய வைத்த உணவுப்பண்டம் (காய்கறி, மீன் போன்றவை)
  3. ஒல்லியான உருவம்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. dried goods, dried stuff
  2. dried food like fish or vegetables
  3. lean person or thing

1.3 விளக்கம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 4
அந்தப்புரம் (பெ)
 
அந்தப்புரம் - ஃபிரெஞ்சு ஓவியர் சடாடின் ஓவியம்

1.1 பொருள் (பெ)

  1. அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. harem, women's apartments in a palace, zenana

1.3 பயன்பாடு

  • வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான். (கல்கி, பொன்னியின் செல்வன்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 5
சேக்காளி (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

  • கிராமத்துத் தெருக்களில் நடந்து போகும்போது எனக்கு ஏழு வயது - யாராவது பெண்கள் அழைத்து, அஞ்சலட்டையைத் தந்து வாசிக்கச் சொல்வார்கள். என்னுடன் வரும் சேக்காளிகள் சிட்டாகப் பறந்துவிடுவார்கள். நான் அந்தக் கார்டை வாங்கிப் பார்ப்பேன். கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது கண்ணுக்கு எதிரே பூச்சி பறக்கும். நான் எப்படியோ, முக்கித் தக்கி, ஒரு வழியாக கல்வெட்டு எழுத்தை வாசிப்பதுபோல வாசித்து விடுவேன். ‘நல்லா பாருப்பா.. இன்னம் ஏதாச்சும் தாக்கல் இருக்கும்’ என்ற பெண்ணின் குரலுக்கு ‘அவ்வளவுதாங்க’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். தெருமுனையில் எனக்காகக் காத்திருக்கும் சேக்காளி, ‘நல்லா மாட்டிக்கிட்டியா’ என்பான். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனான நான் அஞ்சலட்டை வாசித்தது செய்தியாகப் பரவியது. ( வாசிப்பின் வழியே பதிவாகிடும் வாழ்க்கை, ந.முருகேச பாண்டியன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 6
அண்ணாவி (பெ)

1.1 பொருள் (பெ)

  1. ஆசிரியர்
  2. கூத்துத்தலைவன்
  3. அதிகாரி
  4. தமையன்
  5. புலவன்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. teacher
  2. dance master, director of theatrical performances
  3. master
  4. elder brother
  5. poet

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 7
வஞ்சப்புகழ்ச்சி (பெ)

1.1 பொருள் (பெ)

  1. புகழ்வது போல் பேசி இகழ்வது அல்லது இகழ்வது போல புகழ்வது

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. irony; criticism or scorn hidden as praise or vice versa

1.3 விளக்கம்

  • வஞ்சம் + புகழ்ச்சி -> வஞ்சப்புகழ்ச்சி; தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி. புலவர் ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 8
பிடரி (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 9
சிறுவாடு (பெ)

1.1 பொருள் (பெ)

  1. சில்வானம்; சிறுசேமிப்பு
  2. ஜமீன்தார் முதலியோருக்கு உரிய பண்ணை நிலங்கள்; சிறுதேட்டு
  3. பற்றடைப்பு நிலம்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. small savings in money
  2. private property in land, as of Zamindars
  3. reclaimed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 10
துணைக்கண்டம் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. கண்டத்தை விட சற்றே அளவில் சிறிதான ஒரு நிலப்பரப்பு.

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. subcontinent
  2. A large landmass which is either smaller than a continent

1.3 பயன்பாடு

  • இந்த உலகிலேயே இன்னும் பன்மைத்தன்மை மிஞ்சி இருக்கும் ஒரே நிலப்பரப்பு நமது துணைக்கண்டம் மட்டும்தான். இயற்கையையும், சுதந்திரத்தையும், தனிப்பட்ட ஆன்மீக தேடல்களையும் கைகொள்ளும், வழிபடும் இறுதி பாகன்கள் நாம் மட்டும்தான்.(அழிக்கப்படும் பன்மைத்தன்மை..)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 11
oscillator (பெ)

1.1 பொருள் (பெ)

  1. அலையியற்றி
  2. இயற்பியலிலும் பொறியியலிலும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் மின்னணுவியல் கருவி.

1.2 மொழிபெயர்ப்பு (தமிழ்)

  1. அலையியற்றி

1.3 பயன்பாடு

  • அலையியற்றி என்பது அலைகளை உருவாக்கும் மின்னணுவியற்கருவி ஆகும். (தமிழ்நாட்டுப் பாடநூல் கழக விளக்கம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 12
தாவாய் (பெ)
 
தாவாயில் கை வைத்துள்ளார்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 13
திரிசூலம் (பெ)
 

1.1 பொருள் (பெ)

  1. முத்தலைச்சூலம், மூன்று கூரிய முனைகளை உடைய ஈட்டி போன்ற ஆயுதம்
  2. சிவனின் ஆயுதம்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. trident
  2. lord shiva's weapon of choice

1.3 பயன்பாடு

  • வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே(திருநாவுக்கரசர்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 14
அக்குல்லி (பெ)
 
அக்குல்லி நோய் பாதிப்படைந்த கால்

1.1 பொருள் (பெ)

  1. எலும்புருக்கி எனும் நோய்.

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. TB
  2. tuberculosis, consumption

1.3 பயன்பாடு

  • அக்குல்லி நோய் தாக்கியோர் உடல் இளைத்துக் காணப்படுவர். (பொதுவான சொற்றொடர்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 15
கவாத்து (பெ)
  1.  
    1795 இல் கவாத்து

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 பயன்பாடு

  • எல்லாம் கணக்கெடுத்து, சிடுக்கில்லாமல் திட்டம் செய்து, பேராசிரியரைக் குறிவைத்து, தோது பார்த்துக் காத்துக்கிடந்து கவாத்து செய்தது பாம்பு. (பாம்பு, நாஞ்சில்நாடன்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 16
கல்லாப்பெட்டி (பெ)
 

1.1 பொருள் (பெ)

  • பணப்பெட்டி, ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 17
கொழுவு (வி)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 18
வில்லங்கம் (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 19
குறுவை (பெ)

1.1 பொருள் (பெ)

  1. வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை
  2. மூன்று மாதத்தில் பயிராகும் ஒருவகைச் செந்நெல்.

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. a dark species of paddy sown in Vaikasi and reaped in two months
  2. an inferior reddish paddy, maturing in three months

1.3 பயன்பாடு

  • தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் உரிய நேரத்தில் நீர்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டுள்ள வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் 3.2 லட்சம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய முதல்வர் அறிவுரை வழங்கினார். (விகடன், ஜூன் 18,2011)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 20
அண்டப்புளுகு (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 பயன்பாடு

  • பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு. - காட்கோ வாலிஸ் (கீற்று)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 21
பன்னாடை (பெ)
 
பன்னாடைகள் தொங்குகின்றன

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 சொல்வளம்

சில்லாட்டை, பாளை, ஓலை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 22
மப்பு (பெ)
 
மப்பும் மந்தாரமுமான வானிலை

1.1 பொருள் (பெ)

  1. போதை, மந்த நிலை
  2. மேக மூட்டம்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. intoxication, inebriation
  2. cloudy, overcast (sky) ஆங்கிலம்

1.3 பயன்பாடு

  1. "மப்பு" ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் - (தினமலர் செய்தி)
  2. வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சி அளித்தது.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 23
சம்மணம் (பெ)
 
சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  • sitting cross-legged

1.3 பயன்பாடு

  • காலைச் சம்மணம் கட்டிக் கொண்டு சில்லென்ற சிமிட்டித் தரையில் உட்காருகிறாள் நிதா (வேருக்கு நீர், திருமதி ராஜம் கிருஷ்ணன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 24
கிஸ்தி (பெ)

1.1 பொருள் (பெ)

  • ஒரு வித நில வரி; விளை நிலங்களின் மீது நில அளவுக்கு ஏற்றார்போல விதிக்கப்பட்ட வரி

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  • tax on arable land ஆங்கிலம்

1.3 பயன்பாடு

  • கிஸ்தி, திரை, வரி, வட்டி.! வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம், சக்தி கிருஷ்ணசாமி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 25
அந்தகன் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. அழிப்போன்
  2. எமன்
  3. குருடன்
  4. புல்லுருவி
  5. சவுக்காரம்
  6. ஓர் அசுரன்
  7. ஓர் அரசன்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. destroyer
  2. Yama, God of Death, as causing death
  3. blind man
  4. soap
  5. species of loranthus
  6. name of an Asura
  7. name of a descendant of Yadu, and ancestor of Kṛṣṇa

1.3 பயன்பாடு

  • கம்பனைப் பார்ப்பது அந்த நூறு பாடல்களைப் பார்ப்பதல்ல. அந்தகன் யானைப் பார்ப்பது போலவும் அல்ல. (காப்பிய இமயம், நாஞ்சில் நாடன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 26
பிலாக்கணம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 27
அலப்பறை (பெ)

1.1 பொருள் (பெ)

  1. அலட்டல், பந்தா
  2. பிச்சைக்காரன்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. boast, exaggeration, swagger
  2. beggar

1.3 பயன்பாடு

  • அவன் அலப்பறை தாங்க முடியவில்லை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 28
பாதாதிகேசம் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. அடி முதல் தலை வரை
  2. தலைமக்களின் அடி முதல் கேசம் வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்த வகை.

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. from head to foot
  2. a poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 29
கசாப்பு (பெ)
 
கசாப்புக் கடை

1.1 பொருள் (பெ)

  1. ஆடு மாடு போன்ற விலங்குகளின் கொலை
  2. மாமிசம் விற்போன்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. slaughter of animals for food
  2. butcher

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

 

தினம் ஒரு சொல்   - சூன் 30
வாதை (பெ)
  1.  
    நோயாளிகள்,1921

1.1 பொருள் (பெ)

  1. துன்பம்
  2. வேதனை செய்யும் நோய்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. affliction, torment, distress
  2. painful disease

1.3 பயன்பாடு

ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை. (திரைப்படப் பாடல்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக