ஒலிப்பு
(கோப்பு)

கண்டம் (பெ)

  1. துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
  2. நிலத்தின் பெரும்பிரிவு
  3. சோதிடத்தில் கிரகநிலைகளின் காரணமாக உயிருக்கு நேரிடக்கூடிய ஆபத்து
  4. அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி
  5. பகுதி
  6. பல்வண்ணத் திரை
  7. வயல்வரம்பு
  8. வெல்லம்
  9. கண்டசர்க்கரை
  10. வாள்
  11. எழுத்தாணி
  12. கவசம்
  13. கேந்திரம்
  14. கண்டசாதி - தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
  15. தொண்டை
  16. கழுத்து
  17. குரல்
  18. யானைக் கழுத்தில் இடும் கயிறு
  19. 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை, கண்ட யோகத்தின் தனித்தமிழ் சொல்லும் இதுவே.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. piece, cut or broken off; fragment, slice, cutting, chop, parcel, portion, slip
  2. continent
  3. (Astrol.)supposedly critical period of adversity as indicated by planetary positions
  4. block of land measuring between 300 and 350 acres taken for the purposes of survey
  5. section, part
  6. curtain made of parti-coloured material
  7. small ridges between paddy fields which divide the field into plots and embank

the water required for the crop

  1. jaggery
  2. a kind of sugar
  3. sword
  4. iron style for writing on palmyra leaves
  5. coat of mail
  6. (Astrol.) the rising, fourth, seventh and tenth signs
  7. (Mus.) A sub-division of time-measure, one of five cāti
  8. throat
  9. neck
  10. voice, vocal sound
  11. elephant's neck rope
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செந்தயிர்க் கண்டம் (கம்பரா. நாட்டுப். 19)
  • நெடுங்காழ்க் கண்டங் கோலி (முல்லைப். 44)
  • பொன்னவன் கண்டத் துறினு மமுதெனப் போற்றுவரே (விதான. குணாகுண. 25)
  • காராருங் கண்டனை (தேவா. 1071, 1)
  • குழலொடுகண்டங்கொள (மணி. 19, 83)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :துண்டம் - பகுதி - பிரிவு - துண்டு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டம்&oldid=1968171" இலிருந்து மீள்விக்கப்பட்டது