சம்மணம்
சம்மணம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தரையில் முழங்கால்களை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்து உட்கார்தல்; சப்பணம்; அட்டங்காலிடுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sitting cross-legged
விளக்கம்
பயன்பாடு
- காலைச் சம்மணம் கட்டிக் கொண்டு சில்லென்ற சிமிட்டித் தரையில் உட்காருகிறாள் நிவேதா (வேருக்கு நீர், திருமதி ராஜம் கிருஷ்ணன்)
- தரையில் சம்மணம் இட்டபடி உட்கார்ந்து அரைமணி கூட வேண்டாம், பத்து நிமிடங்கள் தியானம் செய்யணும் என்றால் பெண்களுக்கு நடக்கிற காரியமா என்ன? எத்தனை இடைஞ்சல்கள் வரும்? யாராவது [கதவு|கதவைத்]] தட்டுவார்கள். வேலைக்காரி அழைப்பாள். இல்லையா பூனை சமையலறைக்குள் புகுந்து பால் பாத்திரத்தை உருட்டும். குழந்தைகள் வீட்டில் இருந்தால் ரகளை செய்வார்கள். ஏதோ ஒன்று. (வானப்பிரஸ்தம், தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சம்மணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உட்கார் - சப்பணம் - சப்பணங்கால் - சப்பணம்கூட்டு - சப்பணம்கட்டு