வில்லங்கம்
பொருள்
வில்லங்கம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bar, impediment, difficulty
- trouble, distress
- charge or encumbrance on properties
- defect in title to properties
- issue, contest, dispute, claim
விளக்கம்
பயன்பாடு
- வில்லங்கச் சான்றிதழ் - encumbrance certificate
- வில்லங்கமான ஆள் - problematic person
- வில்லங்கமான கேள்வி - question that could create trouble
- வில்லங்கம் உள்ள சொத்து - a property with some encumbrance
- வில்லங்கத்தில் சிக்கு - get into trouble
- வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காதே - Don't buy into trouble
- ஒரு நிலம் வாங்கும்பொழுது அதில் வில்லங்கம் எதாவது உள்ளதா வேறே யார் பெயரிலாவது கிரயம் மற்றும் அடமானம் உள்ளதா என்று பார்க்க பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்க்கவேண்டும்.
- "நீரு ஏழைகள் நிலத்துல வில்லங்கம் பண்ணுனது மாதுரி நாங்க ஒம்ம உடம்புல வில்லங்கம் பண்ணமாட்டோம். பயப்படாம விவரமாச் சொல்லும்" (ஊருக்குள் ஒரு புரட்சி, சு. சமுத்திரம் )
- அவர்களுக்கிடையே அதிகாரப் பகிர்வில் வில்லங்கம் வந்தால் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி மல்லுக்கு நிற்பர் ([1])
- கிரயம் பெறும் இடத்தின் மீது உள்ள வில்லங்கம் குறித்து சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தில் சான்று பெற வேண்டும் (அதிகரிக்கும் நில மோசடி, தினமணி, 26 ஏப்ரல் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- வில்லங்கம் (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---வில்லங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +