இறுதிப்போலி
பொருள்
இறுதிப்போலி(பெ)
- (இலக்கணம்). சொல்லின் இறுதியெழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எழுத்துப்போலி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி. முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும்.
- இறுதிப்போலி = கடை + போலி. இது கடைப்போலி எனவும் அழைக்கப்படுகிறது.
- எடுத்துக்காட்டு: அறம் - அறன். அறம் என்பதன் இறுதி 'ம்' மாறி 'ன்' என்பது போலியாய் வந்தாலும் பொருள் ஒன்றே. அதேபோல், பந்தல் - பந்தர் என்பதில் 'ல்' என்பதற்குப் பதில் 'ர்' என்பது போலியாய் வந்தாலும் பொருள் மாறவில்லை. நிலம் - நிலன் என்பதும் அதேபோல்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இறுதிப்போலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +