உழக்கு (பெ)

உழக்கு)
  1. காற்படி
  2. கவறிட்டு உருட்டும் உழக்கு

(வி)

  1. கலக்கு
    • உழக்கிக் குடி
    • பேரகழியி னுழக்கிய கரிகள் (நைடத. நகர. 2).
  2. மிதி
    • அவரைக்கழலவுழக்கி (கலித். 106,18).
  3. கொன்று திரி
    • சினஞ்சிறந்து களனுழக்கவும் (மதுரைக். 48).
  4. உழு
  5. விளையாடு
    • உரவுத்திரையுழக்கியும் (பட்டினப். 101).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (n)

  1. dice box

(v)

  1. disturb, stir up
  2. trample down, tread upon
  3. ravage, devastate
  4. [plough]]
  5. play
விளக்கம்
பயன்பாடு
  • பல ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பாடு தூக்கி என்று அறியப்பட்ட ஓர் இனம் எங்கள் மத்தியில் வாழ்ந்தது. கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் பத்தாயிரம் பேருக்கு மதியச் சாப்பாட்டுப் பொதிகளை இவர்கள் தினம் காவினார்கள்... சைக்கிள் பின் காரியரில் கட்டிய பாரிய பெட்டிகளில் சாப்பாட்டுத் தட்டுகளை அடுக்கிக்கொண்டு குறுக்குமறுக்காகவும், தாறுமாறாகவும் விரைந்து செல்வார்கள். நான் மணமுடித்த புதிதில் எனக்கு ஒரு சாப்பாடு தூக்கி கிடைத்தான். அவன் பெயர் பியதாச. என் மனைவி பத்து மணிக்கே சமையலை முடித்துவிடுவார். என் மனைவி பத்து மணிக்கே சமையலை முடித்துவிடுவார். சாப்பாட்டு பிளேட்டைப் பெட்டியிலே அடுக்கி, இரண்டுபக்கமும் பெட்டி அசைய நின்றபடி உழக்கிக்கொண்டு விரைவான், பியதாச. (சாப்பாடு தூக்கி, அ. முத்துலிங்கம் )

(இலக்கியப் பயன்பாடு)

  • உழக்கேயுண்டுபடைத்தீட்டி (தேவா. 1154, 4)
  • பவள வுழக்கிற் கோதை புரள (சீவக. 927)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---உழக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :படி - மரக்கால் - குறுணி - பதக்கு - ஆழாக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழக்கு&oldid=1101840" இலிருந்து மீள்விக்கப்பட்டது