கத்திரி வெயில்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கத்திரி வெயில் (பெ)
- கோடையில், குறிப்பாகச் சித்திரை, வைகாசி மாதங்களில், வெப்பம் மிகுந்த நாட்கள்; அக்கினி நட்சத்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். ([1])
- ``அக்கினி நட்சத்திரம் அல்லது ``கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும் வைகாசி முதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும். ([2])
- பொதுவாக கத்திரி வெயில் 3 வாரம் நீடிக்கும். எனினும், அக்னி தொடங்குவதற்கு முன்பும், வெயில் வாட்டும். இதை முன் கத்திரி என்கின்றனர். அக்னி வெயில் முடிந்த பிறகும் 2 வாரத்துக்கு வெயில் வாட்டி எடுக்கும். இதை 'பின் கத்திரி' என்கின்றனர். இந்த நாட்களை எல்லாம் கணக்கிட்டால் 7 வாரங்கள் கத்திரி வெயில் நீடிக்கிறது. ([3])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கத்திரி வெயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அக்கினி நட்சத்திரம் - கத்திரி - வெயில் - கோடை - #