காராபூந்தி

தமிழ்

தொகு
 
காராபூந்தி:
படம்:- இனிப்புவகை பூந்தி?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • காராபூந்தி, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--உருது--khārā- būnd.--மூலச்சொல் )
  • (காரம்+பூந்தி)
  1. ஓர் உணவுப் பண்டம்
  2. ஒரு பட்சண வகை
  3. ஒரு பணிகாரம்

விளக்கம்

தொகு
  • தமிழகத்தில் பிரபலமான ஒரு பட்சணவகைத் தின்பண்டம்...கடலைமாவை தண்ணீரில் அரைத்திடப் பக்குவத்தில் கரைத்து, பூந்திக்கரண்டி என்னும் ஒரு சாதனத்தின் உதவியால், கொதிக்கும் எண்ணெயின் மேல், தேய்த்து, மணிமணியாகப் பொரித்து உண்ணும் ஓர் உணவு...இந்தப் பக்குவத்திற்கு பூந்தி என்பது பொதுப் பெயர்...இந்த பொரித்த உண்ணும் மாவுமணிகளை உப்புத்தூள், மிளகாய்ப்பொடி, பொரித்த கறிவேப்பிலையோடு நன்குக் கலந்தால் காராபூந்தி ஆகிறது...அல்லது சர்க்கரைப் பாகிலிட்டு உதிர் உதிராகப் பிசறி எடுத்தால் சர்க்கரைப் பூந்தி என்னும் இனிப்புப் பண்டமாகும்...மேலும் ஏலக்காய்ப்பொடி, முந்திரிப் பருப்புத் துண்டுகள், உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை பூந்தியோடு சர்க்கரைப்பாகில் போட்டுக்கிளரி உருண்டையாகப்பிடித்தால் பூந்திலட்டு ஆகும்...எந்தப் பக்குவத்திலும் உருசிகரமான ஓர் தின்பண்டம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. eatable in the form of small balls prepared from spiced salted flour in ghee or oil
  2. an indian snack made with bengal gram flour deep fried in oil and mixed with salt and chilli powders.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காராபூந்தி&oldid=1285196" இலிருந்து மீள்விக்கப்பட்டது