கித்தாப்பு


பொருள்

கித்தாப்பு(பெ)

  1. நூல், புத்தகம், கிதாப்பு
  2. கண்ணியமான பட்டம்
  3. பெருமை, கீர்த்தி
மொழிபெயர்ப்புகள்
தொகு

ஆங்கிலம்

  1. book
  2. title, degree
  3. honour
விளக்கம்
பயன்பாடு
  • பெரிய பதவியில் இருப்பவன் என்ற கித்தாப்பு அவருக்கு இருந்தது.
  • நாங்கள் இப்பேர்ப்பட்ட பரம்பரையாக்கும் என்கிற கித்தாப்பு அவரையறியாமலே வெளிப்படுகிறது.
  • அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
ஒத்தையா நின்னு தான் வித்தையைக் காட்டுவேன் என் கித்தாப்பு - திரைப்பாடல்
  • மத்தாப்பு போல சிரிச்சுட்டுப் போனா(ள்) கித்தாப்பு எல்லாம் மிதிச்சிட்டுப் போனா(ள்) - திரைப்பாடல்
  • அரசாங்கப்பதவிகளில் வீற்றிருந்து அதிகாரம் மேவி அரட்டியவர்கள்- பழைய கித்தாப்பு நாளடைவில் மங்கி தரித்திரத்தில் புதைந்தவர்கள். ([1])
  • என்னங்க... என்ன ஆச்சு? என்று நாம் அடி வயிறு கலக்கக் கேட்டோம்.. யாரோ நடக்கற மாதிரி சத்தம் கேக்கலை? என்று கிசுகிசுப்பாக நம்மிடம் கேட்க... நாம் வெளியில் ஓடுவதற்குத் தயாரானோம்! எட்டிப் பிடித்துக்கொண்ட வாட்ச்மேன், நமது கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டி, அள்ளுவுட்டுக்கினியா தம்பி... சும்மா தமாசு என்று சொல்ல... சேச்சே, இதுல பயப்பட என்ன இருக்கு என்றோம் கித்தாப்பாக! (அந்த நள்ளிரவில்!, ஆனந்தவிகடன், 05-அக்டோபர் -2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • .


( மொழிகள் )

சான்றுகள் ---கித்தாப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கித்தாப்பு&oldid=1969342" இலிருந்து மீள்விக்கப்பட்டது