கிருட்டிணன்

தமிழ்

தொகு
 
கிருட்டிணன்:
இந்துக்களின் முதன்மைக் கடவுட்களில் ஒருவர்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---कृष्ण--க்1ருஷ்ண--வேர்ச்சொல்

Gunadharsan

தொகு
  • கிருட்டிணன், பெயர்ச்சொல்.
  1. கிருஷ்ணன் (சூடாமணி நிகண்டு)
  2. அருச்சுனன் (பிங். )
  3. வியாசன் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. krishna -- a hindu god
  2. arjuna --a warrior in mahabharatha, a hindu epic.. one of five pandavas
  3. sage vyasa -- author of mahabharatha a hindu epic.

விளக்கம்

தொகு
  • இந்து மத புராண, இதிகாசங்கள் சம்பந்தப்பட்ட முப்பெரும் பாத்திரங்களின் பொதுப்பெயர் கிருட்டிணன் என்பதாம்...இது कृष्ण--க்1ருஷ்ண என்னும் சமசுகிருதச் சொல்லின் தமிழாக்கம்...திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணன், மகாபாரதத்தில் பேசப்பட்ட பஞ்சபாண்டவர்களில் ஒருவரும், வில் வித்தையில் ஈடில்லாதவருமான விஜயன்/பார்த்தன் எனப்படும் அருச்சுனன் மற்றும் மகாபாரத இதிகாசத்தை ஆக்கிய வியாச முனிவன் ஆகியோர் கிருட்டிணன் என்றேக் குறிப்பிடப்படுகின்றனர்..

இலக்கியமை

தொகு

குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
அற்றமில் அர்ச்சுனற்கே::அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிருட்டிணன்&oldid=1997258" இலிருந்து மீள்விக்கப்பட்டது