கீர்த்தனை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கீர்த்தனை(பெ)
- பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடப்படும் ஓர் இசைப்பாட்டு
- புகழ்ச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேவகீர்த்தனை - A song of praise of a deity, a psalm, a sacred hymn
- கீர்த்தனைகள் யாவும் பக்தி என்ற ஒற்றைத்தளத்தில் நம் இசையை நிறுத்தி இருப்பது உண்மையே. கீர்த்தனைகள் பாடிய பெரியோர்கள் யாவரும் முழுக்கமுழுக்க இறைவனையே பாடி இருக்கிறார்கள். இதற்கொரு காரணம் அவர்கள் வாழ்ந்த காலச் சூழல் அப்படி. தமிழில் முத்துத்தாண்டவர் தொடங்கி, ஊத்துக்காடு, வள்ளலார், பாரதி என்று ஒரு பெரிய பாரம்பரியமே கீர்த்தனை வடிவில் பாடியுள்ளது. (சொல்லப்படாத தமிழிசை, நா.மம்மது, கீற்று)
- அக்காவுக்கு ஸ்வர வரிசைகளில் ஒருவித சாமர்த்தியம் வந்ததும் பாட்டுவாத்தியார் 'யாரோ, இவர் யாரோ' என்ற கீர்த்தனையை சொல்லிக்கொடுத்தார். இது பைரவி ராகத்தில் அமைந்தது. அருணாசலக்கவிராயர் அல்லும்பகலும் பாடுபட்டு அருமையாக எழுதிய பாட்டு. அக்கா அதைச் சப்பு சப்பென்று பாடமாக்கி உருத்தெரியாமல் ஆக்கிவிட்டார். (அக்காவின் சங்கீத சிட்சை, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கீர்த்தனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பாட்டு - பாடல் - கீர்த்தனம் - உருப்படி - பஜனை