சீர்மை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீர்மை(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- greatness, excellence, eminence
- reputation, renown
- weight
- moderateness
- decorum, good behaviour
- smoothness, evenness, polish
- country
விளக்கம்
பயன்பாடு
- "மருத நாட்டு இளவரசி" திரைப்படத்தைத் குறைந்தது பத்து தடவையாவது பார்த்திருப்பேன். எனக்குத் திகட்டவில்லை. தமிழ் எப்படித் திகட்டும்? உரையாடல்கள் ஒவ்வொன்றும், உறையிலிருந்து உருவி எடுத்த வாளின் கூர்மையோடும்; சித்தன்ன வாசலில் செதுக்கிவைக்கப்பெற்ற சிற்பங்களின் சீர்மையோடும்; கொற்கை முத்துகளைக் கோவையாய் ஒரு நூற்சரட்டில் கோத்துவைத்தாற்போன்ற நீர்மையோடும்; எல்லாவற்றிற்கும் மேலாக எடுத்துவைத்த வாதங்களில் நெறி பிறழா நேர்மையோடும் - விளங்கி, என்னை வியப்பில் விழுத்தின. (நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், செப் 14, 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123).
- குடிமைக்குஞ் சீர்மைக்கும்(தஞ்சைவா. 241).
- மென்மைசீர்மை நொய்ம்மை (மணி. 27, 254).
- நின்னைமிகாமற் சீர்மைப்படநுகர்ந்த சிறிய களிப்பு (கலித். 97, உரை).
- சீர்மைசிறிதுமிலி (திருப்பு. 109).
- சீர்மைமறவேல் - forget not that which is comely
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சீர்மை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி