நேமி
ஒலிப்பு
|
---|
பொருள்
நேமி, .
- வட்டம்
- தேரின் சக்கரம்; தேருருளை
- சக்கராயுதம்
- ஆஞ்ஞாசக்கரம்
- சக்கரவாளம்
- பூமி
- கடல்
- மோதிரம்
- சக்கரவாகம் எனும் பறவை
- சக்கராயுதனாகிய திருமால்
- தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- circle
- wheel of a chariot
- discus
- wheel of sovereignty
- mythical range of mountains
- earth
- sea, ocean
- ring
- cakra bird; ruddy goose
- viṣṇu, as wielding the discus
- an arhat, one of 24
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- தேர்முடுக . . . விளங்கு சுடர்நேமி (குறுந். 189)
- திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்(திவ். இயற். திருவிருத். 9)
- நேமி யுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3)
- நேமி முதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4)
- பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப (குறுந்.227)
- நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70)
- நிகரி னேமித னீணகர் (சீவக. 912)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
பொருள்
நேமி, வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: சக்கராயுதம் - ஆழி - நியமி - நேமிப்புள் - நேமிநாதன் - நேமிநாதம் - நேமியான் - நேமியோன் - நேமிவலவன்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +