நியமி
பொருள்
நியமி வினைச்சொல்
- உத்தியோகம், பணி, பதவி முதலியவற்றில் அமர்த்து
- தீர்மானி
- சங்கற்பஞ்செய்
- பிறப்பி
- கட்டளையிடு
- வகைப்படுத்து
- (இலக்கணம்). ஓரிடத்திற் பலவிதிகள் நிகழுநிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். சொல். 87, சேனா.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- appoint, nominate, engage, designate, ordain, institute, assign, appropriate
- resolve, determine
- consecrate, dedicate, devote
- produce,originate, bring into being
- order, command
- classify
- (Gram.)make a rule imperative when, along with other rules, it is merely optional
விளக்கம்
பயன்பாடு
- ஒருவனுக்கு நியமித்த பெண் - a betrothed girl
- பதிலாக நியமிக்கப்பட்டவன் - one's substitute
- நியமிதம் - that which is appointed, fixed, regulated, determined
- நியமித்த காலம் - appointed time
- நியமிப்பு - 1. appointment, ordination; 2. dedication, consecration, சங்கற்பம்.
(இலக்கியப் பயன்பாடு)
- இடமுங் காலமும் நியமித்து (தொல். பொ. 3, உரை).
- எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி. 2).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நியமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி