பயனர் : ஆராவமுதன்/மணல்தொட்டி
ஆள வளரி ~அரசமரம்
ஆளவள்ளி ~மரச்சக்கரைவள்ளி
ஆளிகரைத்தான் ~புளியமரம்
ஆளியங்கள் ~பெருச்சாளி
ஆளிவாசன் ~கொட்டைப் பாக்கு
ஆளைக்கனி ~பழம்
ஆளைப்பற்றி ~உடும்பு
ஆளைப்பிச்சான் ~புளிநறளை (புளிநடலை)
ஆள் காட்டி ~மனிதரைக் கண்டவுடன் கூச்சலிடும் குருவி இது ஆள்காட்டிக் குருவி என்றழைக்கப்படும்
ஆள்சுணங்கி ~தொட்டால் வாடி
ஆள் சொக்கல் ~தூங்கல், மூர்ச்சித்தல்
ஆள்தூண்டிவிரல் ~சுட்டுவிரல்
ஆள்மறந்தான் புல் ~இராவணன் மீசைப்புல்
ஆள்மிரட்டி ~சங்கு
ஆள் வணங்கி ~அரசமரம், தொட்டால் வாடி, கொட்டைக் கரிக்கி, கல்லத்தி, மலைச்சர்க்கரை வள்ளி
ஆள்வல்லி ~மலைச்சர்க்கரை வள்ளி
ஆள்வள்ளரி ~அரசமரம்
ஆள்வாடைத் தட்டி ~நோக்கு , நோக்கி (மரம்)
ஆள்வாரிதி ~அரசமரம்
ஆற ~ஆத்தி
ஆறகம் ~காட்டாத்திப்பூ
ஆறகெதி ~திப்பிலி
ஆறக்குமம் ~பித்தளை
ஆறணி யத்திரை ~ குதிரைச் செவிமருந்து
ஆறத்திகன் ~சூதபாடாணம்
ஆறப்பரி ~குடசப்பாலை, முத்து
ஆறம் ~குடசப்பாலை, முத்து, அஞ்சனபாடாணம், அத்தி, சந்தனம்
ஆறரிசி ~ஒருவகையரசி
ஆறவரியம் ~அரசமரம்
ஆறாங்காய்ச் சலுப்பு ~ஆறுதடவை காய்ச்சி யெடுத்த வெடியப்பு; ஐந்து மாதத்திய கருப் பிண்டத்தினின்று ஆறு தடவை காய்ச்சியெடுத்த பிண்டவுப்பு
ஆறாடமங்கம் ~கருங்குளவி
ஆறாதாரச் சரக்கு ~துருசு, வெடியுப்பு, காரம், சாரம், கரியுப்பு, சீனம் முதலிய ஆறு விதச் சரக்குகள்; மிக சிறந்த ஆதாரமான சரக்குகள்
ஆறாதாம் ~முலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய உடம்பிற்கு ஆதாரமாகவுள்ள ஆறுவகைத் தத்துவங்கள்
ஆறாப் புண் ~சூலை நோயினால் ஏற்படும் ஒருவித அழிபுண்
ஆறாமலெரித்தல் ~ மருந்து தயாரிக்கும் போது இடைவிடாமல் எரித்தல்
ஆறாவரசம் ~கருந்திராட்சை
ஆறாவிரணம் ~ஆறாப்புண்
ஆறானரம்பு ~கடாட்ச நரம்பு, ஒருகேள்வி நரம்பு
ஆறிதழ் ~வெள்ளைப் பூண்டு
ஆறிய விரணம் ~ஓரத்தில் கெட்டியாகவும் வீக்கம் வலியின்றிப் பக்குக்கட்டியுமிருக்கும்
ஆறிழைவல்லி ~பெருச்சாளி
ஆறுகாலி ~சிலந்தி, ஆறுகால் வண்டு
ஆறு கிராணி ~அதிசார பேதியால் எழுந்த அறுவகைக் கிராணிகள் அவையாவன பித்தகிராணி, உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாதக்கிராணி, மேகக்கிராணி, மூலக் கிராணி, வாதக்கிராணி
ஆறுசூலை ~வாத சூலை, பித்த சூலை, சிலேட்டும சூலை, மேக சூலை, கருப்பசூலை, நேத்திர சூலை
ஆறுடனங்கோல் ~அழிஞ்சில்
ஆறுதலம் ~ஆறாதாரம்
ஆறு பருவம் ~ஆவணி, புரட்டாசி கார்காலம், ஐப்பசி, கார்த்திகை கூதிர்காலம், மார்கழி,
ஆறுபுள்ளி வண்டு ~முதுகின் மேலாறு புள்ளிகளையுடைய வண்டு , இது கடித்தால் வட்டமான தடிப்புகளுண்டாகும்
ஆறு மலடு ~வாத, பித்த சிலேட்டுமம், கிருமி, சூதகம், துன்மாமிசம் முதலிய இவ்வாறு வகைக் காரணங்களினால் பெண்களுக்கேற்படும் மலட்டு நோய்
ஆறுமாதத் தண்டு ~ஆறு மாதங்கழித்துப் பிடுங்கும் கீரைத் தண்டு
ஆறுமுகக் குரு ~கொங்கணர் வாத காவியத்தில் சொல்லியுள்ள ஒரு குரு மருந்து
ஆறுமுகர் வாகனம் ~மயில், மயிலிறக
ஆறுமுறை மதி ~கத்தூரி
ஆறுவகைச் செயநீர் ~அறுவகை செயநீர்
ஆறுவகை ~அறுவகை மூத்திரம்
ஆறுவரை ~ஆறாதராம்
ஆறோசிகம் ~சிறுகீரை
ஆறோதயத்தி ~கொட்டைப் பாசி
ஆற்கம் ~அம்பளங்காய்
ஆற்குவம் ~கோதும்பை
ஆற்சாலகம் ~தொட்டால்வாடி
ஆற்றறுகு ~ஒருவகை அறுகம்புல்
ஆற்றாமை வாயு ~வயிற்றில் வாயு மூலாக்கினியை மறைத்துச் சாப்பிட்ட உணவு செரியாமல் புளியோப்பமிட்டு மலத்தை மிகுதியாகத் தள்ளுமோர் வாயு
ஆற்றாலின் சத்து ~சிலாசத்து (வேனிற் காலத்தில் பாறையின் கொதிப்பினால் கல்லினின் றொழுகு மதம்) (தமிழில் கல்மதம் என்பர்)
ஆற்றிலத்தை ~ஒருவகை இலந்தை
ஆற்றின் வித்து ~கற்பூரசிலாசத்து
ஆற்றுக் கட்டிக்கோலா ~கொக்குமீன்
ஆற்றுக்க லிங்கம் ~ஊறுகாய்க்கு உபயோகப்படுமோர் விதக்காய்
ஆற்றுக்குள் அழகிய மணல் ~கருமணல்
ஆற்றுக் கெண்டை ~ ஆற்றில் வாழுங் கெண்டை மீன்
ஆற்றுக்கொம் பொதி மரம் ~பெரும்பூம்பாதிரி
ஆற்றுச் சங்கிலை ~மலை வட்டை எனும் மரம்
ஆற்றுச் சவுக்கு ~ஆற்றலரி, ஒருவகைச்செடி
ஆற்றுச் சாம்பா ~ஒருவகைச் செடி
ஆற்றுச் செருப்படி ~ ஆற்றுச் செருப்படை
ஆற்றுத்தும் மட்டி ~பேய்த்தும்மட்டி (பேய்க்கொம்மட்டி)
ஆற்றுத்தும்பறுகு ~உப்பறுகம்புல்
ஆற்றுநுணா ~ஆற்றோரத்தில் விளையும் நுணாமரம்
ஆற்று நெட்டி ~நீர்ச்சுண்டி, நீர்
ஆற்றுப்பசலி ~ஒரு வகைப் பசலை
ஆற்றுப் பச்சை ~நாகப்பச்சைக்கல், இது உபரசச் சரக்குகளுளொன்று
ஆற்றுப்பஞ்சு ~கடற்கொஞ்சி
ஆற்றுப் பாலை ~ஒரு சிறிய மரம், பட்டையைச்சுரத்திற்குக் குடி நீரிட்டுக் கொடுப்பர்
ஆற்றுப் பூச்சேவசம் ~நீருமரி
ஆற்றுப் பூத்தான் ~பூனைக்காலி
ஆற்றுப் பூவரசு ~செடிப்பூவரசு
ஆற்றுப்பேதி ~செப்பு நெருஞ்சி
ஆற்றுமம் ~நத்தை, பிராணன்
ஆற்றுமருது ~நீர் மருது
ஆற்று மருந்து ~ஆற்றலரி வைராந்தகள் (பலத்தைக் கொடுக்கும் மருந்து)
ஆற்றுமரோகம் நீக்கி ~அவுரி
ஆற்று மல்லிகை ~ஒருவகை நீர்ப் பூண்டு, ஒருவகை மல்லிகை
ஆற்றுமாரி ~நீருமரி
ஆற்றுமாலிகம் ~உப்பிலாங்கொடி
ஆற்றுமுரிகா ~உரலாமணக்கு
ஆற்று முள்ளங்கி ~சுவற்று முள்ளங்கி, மணல் முள்ளங்கி
ஆற்று முள்ளாகிகம் ~ஊசிக் குறண்டை
ஆற்று முள்ளி ~கழுதை முள்ளி, கண்டங்கத்திரி
ஆற்று முற்றான் ~பூனைக்காலி
ஆற்று மேலழகி ~ஒருவகைப் பூடு, சோம்பு
ஆற்றுவஞ்சி ~ஒருவகை பூடு
ஆற்றூர் ~ஆரை
ஆனக தாபம் ~மூளையின் சவ்வு அல்லது முள்ளந்தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
ஆனகரம் ~மூளையின் சவ்வு அல்லது முள்ளந் தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
ஆனகி ~உளுந்து
ஆனக்கன் ~அத்தித்துளிர்
ஆனந்த கரந்தம் ~மருக்கொழுந்து
ஆனந்த கரப்பன் ~உடம்பு முழுவதும் சொறி தினவு நீர்க்கசிவு வெடிப்பு முதலிய குணங் களையுண்டாக்கி உடம்பு மெலிந்து காட்டும் ஒரு விதக் கரப்பான் நோய்
ஆனந்த சற்குரு ~முப்பு
ஆனந்த சாரம் ~அரத்தை
ஆனந்த தத்தம் ~ஆண்குறி
ஆனந்த நித்திரியம் ~வெள்ளிலோத்திரம், விளாம்பட்டை
ஆனந்த பிரபவம் ~இந்திரியம்
ஆனந்த பைரவம் ~அகத்தியர் வைத்திய நூலிற் சொல்லியுள்ள ஒரு வகைச் சிந்தூரம்
ஆனந்தமச்சல் ~புளிநடலை
ஆனந்த ரசம் ~கள், இராமரசம், அபினி, பால், கஞ்சா முதலியவைகளினால் செய்யப்படும் ஒருவகைப் போதைப் பானம்
ஆனந்தராசி ~மூக்குறா
ஆனந்த வயிரவம் ~கிராணி, மேகம் முதலிய நோய்களுக்கு அனுபான மறிந்து கொடுக்கும் ஒரு வகைக் குளிகை
ஆனந்த வல்லி ~கோழித்தலைக் கெந்தி, கட்டுக்கொடி, கெந்தகம்
ஆனந்தவா தோதகம் ~வெண்குப்பை மேனி
ஆனந்த வாயு ~ஏறு வாயு, இறங்கு வாயு, வீங்கு வாயு, அண்ட வாயு, நரம்பு வாயு முதலிய தசையைப் பற்றிய வாத நோய்
ஆனந்தவாரிதி ~பேராமுட்டி
ஆனந்தவுப்பு ~கல்லுப்பு
ஆனந்த வைரவன் ~ஆனந்தவாயு, மூலம், குட்டம், சுரம், சன்னி வாதம் முதலிய நோய்களின் எல்லாத் தோடங்களையும் போக்குவதற்காக போகர் முறைப்படித் தயாரித்த ஒருவித மாத்திரை
ஆனபிறந்தேன் ~ஆவாரை, கழுக்காணி
ஆனமோரம் ~இந்துப்பு
ஆனல் ~கறையான்
ஆனாக சுரம் ~குடல் கோளாறினால் வயிறுப்பிக்காணும் ஒருவகை சுரம்
ஆனாக ரோகம் ~குடல், வயிற்றில் காற்று சேர்தல் அல்லது குடலிலிருந்தே வாயு சேர்தல், குடல் வலிவு குறைந்து வயிறுப்பிப் பிகுவாய் விரிந்து போவது போலிருந்து வயிறிரைந்து காற்று பரியுமோர் வாத நோய்
ஆனாஞ்செடி ~குங்கும மரம்
ஆனாத்தம் ~தோல்
ஆனாந்தளை ~காட்டுக் கறிவேப்பிலை
ஆனாய கலை ~ஒரு தசை நார் அடிவயிற்றில் வாயு தங்கி அதனால் குடல்வலி, வயிற்றிரைச்சல், வயிறுப்பிசம் முதலிய குணங்களைக் காட்டுமோர் வகை வாதநோய்
ஆனாயரம் ~கண்ணறைச் சதையழற்சி
ஆனாய வன்மை ~மூக்கு அல்லது தொண்டையின் சதைப்பாகத்திலுள்ள கண்ணறை வலுவடைதல்
ஆனிகா ~சைலாங்கொடி
ஆனிகொடியம் ~வாய்விடங்கம்
ஆனிச்செருக்கா ~இலவணபாடாணம்
ஆனுச்செடி ~குங்கும மரம்
ஆனுருக்கு ~நறுநெய்
ஆனைக்கன்னி ~அத்தித்துளிர்
ஆனைக் கரப்பன் ~ஒருவித அக்கி, ஒருவகைக் கரப்பன்
ஆனைக்கரை ~அத்தித்துளிர்
ஆனைக்கல் ~வழலை
ஆனைக்களை சுத்தம் ~அண்டவுப்பு
ஆனைக்கள்ளி ~அத்தித்தளிர்
ஆனைக்கள்ளி முளையான் ~ஒரு இலையில்லாப் பூண்டு
ஆனைக் கற்றாழை ~கருங்கற்றாழை
ஆனைக் கன்று ~அத்தி மரம், அத்திப் பிஞ்சு, அத்தித் துளிர், யானைக்குட்டி
ஆனைக் கன்னி ~ஆனைக் கண்ணி
ஆனைக்காதிலை ~ஆனைச் செவியடி
ஆனைக் காயம் ~ஆனைப் பெருங்காயம், யானைக்குக் கொடுக்கும் பெருங்காயம் சேர்ந்த மருந்து
ஆனைக்காய் ~அத்திக்காய்
ஆனைக் காய்செறி ~பெருங்காய்ஞ் சொறி
ஆனைக்கார் ~ஆனைக்காய்
ஆனைக்கால் மூலி ~ஆனையடிப் பச்சிலை, நிலக்கடம்பு
ஆனைக்கால் வணங்கி ~பெருநெருஞ்சில்
ஆனைக்கால் வாதம் ~ஆனைக்கால்
ஆனைக்கால் விரணம் ~யானைக்காலிலேற்படும் கொப்புளங் களினாலுண்டான இரணங்கள்
ஆனைக்காளை ~காட்டாமணக்கு
ஆனைக் குட்டம் ~பெருவியாதி அல்லது பெருநோய்
ஆனைக் குண்டுமணி ~மஞ்சாடி மரம்
ஆனைக்குருந்தோட்டி ~மயிர் மாணிக்கம்
ஆனைக் குன்றிமணி ~மஞ்சாடிமரம்
ஆனைக் கெளுத்தி ~யானையைப் போலுணவு உண்ணும் ஒருவகைக் கெளிற்று மீன்
ஆனைக் கொசு ~விடசுரத்தையுண்டாக்கும் ஒருவகைப் பருத்த கால்களையுடைய கொசு
ஆனைக் கொம்பன் ~நீளமான குலைகளையுடைய ஒரு பெருவகை வாழை, ஆறு மாதத்தில் அறுக்கக்கூடிய நெல்
ஆனைக்கோடன் புடலை ~யானைக்கொம்பைப் போன்ற ஒருவகைக் கசப்புப் புடலை
ஆனைக்கோலம் ~அழிஞ்சில்
ஆனைச்சிவந்தி ~பெரியவகைச் சிவதைப்பூடு
ஆனைச் சுண்டை ~பேய்ச்சுண்டை (சுரத்திற்கும் வாதப் பிடிப்புக்கும் உபயோகப்படும்)
ஆனைச்சுவடு ~ஆனைக்காதிலை
ஆனைச்செப்பு ~முலை, மலை
ஆனைச் சொறி ~உடம்பில் மேற்றோல் தடித்து சிறு குருக்கள் ஏற்பட்டு அதிக நமைச் சலையுண்டாக்கு மோர்விதச் சொறி சிரங்கு ; பெருஞ் சொறி சிரங்கு; தோல் தடித்தலினால் ஏற்படும் சொரசொரப்பு
ஆனைத் தடிச்சல் ~ஒருவகைப் படர்கொடி, புளி நறளை, புளியரணைப்பூடு, புளியம் புறணி, புளியாரை
ஆனைத் தடிப்பு ~ஒருவகைப் பூடு, ஏதாவது ஒரு உறுப்பில் நிணநீர் மறுப்பினால் சதை கறுத்துத் தடித்து யானைத் தோலைப்போல் காணுமோர் தோல் நோய்
ஆனைத்தட்டி ~புளியரணை
ஆனைத்தருக்கன் ~இலைக்கள்ளி
ஆனைத்தளிச்சல் ~புளியரணை
ஆனைத்தாவிதம் ~ஊசிப்பாலை
ஆனைத் திப்பிலி ~அத்தித்திப்பிலி என்ற ஒருவகைத் திப்பிலி
ஆனைத் தெல்லு ~ ஒருவகைப்படரும் கொடி
ஆனைத்தேரி ~உரோமவேங்கை
ஆனை நெருஞ்சில் ~பெருநெருஞ்சில், புளி யரணை, செப்பு நெருஞ்சில்
ஆனைநேர்வாளம் ~பேதிக்காக உபயோகப் படுத்தும் ஒரு வகை நேர்வாளச் செடி
ஆனைநொச்சி ~கருநொச்சி
ஆனைபடி ~புளியரணை
ஆனைப் படுவான் ~விலங்கின் நோய், அக்கி
ஆனைப்பட்டை ~அத்திப்பட்டை
ஆனைப்பலா ~மலைக்கொஞ்சில்
ஆனைப்பனை ~கூந்தற்பனை
ஆனைப்பால் ~அத்திப்பால்
ஆனைப் பிச்சான் ~பிள்ளாச்சாரவல்லி எனுமூரில் பயிராகும் ஒரு வகை கொடி; புளி நடலை
ஆனைப் பிடுக்கு ~அண்டகோசத்திற் குள்ளிருக்கும் நிணநீர்த் தாரை தடைபட்டு அதனால் தாபிதங்கண்டு வீக்கமடைந்து அங்குள்ள தசை மேற்றோல் தடித்து பருத்துக் காணுமோர் அண்டநோய்
ஆனைப் பிரண்டை ~ஒருவகைப் பெரும்பிரண்டை
ஆனைப் புளியமரம் ~பப்பரப்புளிய மரம், பூரிமரம், பெருக்க மரம், கோரக்கர் மரம்
ஆனைப் புளியாரை ~பெரும் புளியாரை
ஆனைப்பெருங் காயம் ~ஆனைகாயம்
ஆனைப் பேன் ~கத்தரிச்செடியிலுண்டாகு மோர் பெரிய பேன்
ஆனைமடை ~கௌரி பாடாணம்
ஆனைமரம் ~பப்பரப்புளிய மரம்
ஆனைமல்லி ~பெருமல்லி
ஆனைமுள் ~பெருமுள், குடைவேல்
ஆனையடிச்சாள் ~புளிய மரம்
ஆனையடிச்சிலந்தி ~பெருஞ் சிலந்தி
ஆனையது வழுங்கி ~தேள்கொடுக்கிலை
ஆனையந்தம் ~துருசு
ஆனையவரை ~ஒருவகைப் பெரு அவரை
ஆனையறுகுச் சூரணம் ~ஆனையறுகுப்புல் வேரோடு மற்ற கடைச்சரக்குகளையுங் கொண்டு தயாரித்த மருந்துப் பொடி
ஆனையுடவிந்து ~தலைப்பிண்ட செயநீர்
ஆனைவணக்கி ~தேட்கொடுக்கி
ஆனை வணங்கி ~தேட்கொடுக்கி, குப்பை மேனி, ஆனை நெருஞ்சில் (பெருநெருஞ்சில்)
ஆனவாயன் கற்றலை ~ஒருவிதக் கடல் மீன், பெருவாய் கற்றலை
ஆனைவாலிகை ~தாமரையிலை
ஆனைவால் மயிர் ~இது மருத்துவத்திற்கு உபயோகப்படும்
ஆனை வாழை ~நீளமான குலைகளையுடைய ஒரு பெருவகை வாழை; மொந்தன் வாழை, குளங்கோவை நெல்
ஆனைவிரணம் ~பெருஞ்சிரங்கு
ஆனை விழுங்கு மீன் ~அனையை விழுங்குவதாகச் சொல்லப்படுமோர் வகைப் பெரிய திமிங்கிலம்
ஆனைவீர மயக்கத்தான் ~வீரம்
ஆனை வேணி ~பொற்கொன்னை அல்லது சரக்கொன்னை
ஆன்மதசேகம் ~கற்றாழை
ஆன்மலம் ~பசுஞ்சாணி
ஆன்மவிருத்தி மருந்து ~காய கற்பம்
ஆன்மி ~ஈசனுப்பு
ஆன்வணங்கி ~அரசு, தொட்டால் வாடி
ஆன்றர்க் கம்பால் ~எருக்கம்பால்
ஆன்றடங்கார் ~கோதுமையாற் செய்த ரொட்டி
ஆன்னெய் ~பசுநெய்
இகசேபம் ~எழுமுள்
இகச்சி ~கொத்தான்
இகடி ~கத்தூரி மஞ்சள்
இகடு ~கரும்பு
இகதி ~மருந்து
இகது ~கரும்பு
இகருமம் ~வெள்ளளைத் தும்பை
இகலிலடம் ~மருந்து
இகலை ~வெள்ளை
இகழி ~கொன்றை, கடுக்காய்
இகனத்தார் ~கொன்றை
இகு அண்டா ~நீர்முள்ளி
இகுசாகியம் ~எள்
இகுசி ~மூங்கில்
இகுசோபிதம் ~ஏறழிஞ்சில்
இகுந்தகம் ~ஐங்கணுக்கள்ளி
இகுரமூலி ~பெருமருந்து
இகுளோதயம் ~ஒட்டுப்புல்
இகை ~பொன்
இகைசக்கு ~நீர்முள்ளி
இக்கடகாய் ~ஒருவகை சிவப்புப்பூடு
இக்கபலூதி ~நிலப்பனை
இக்காசி லேட்டுமம் ~சிலேட்டுமம் அதிகரித்து உடம்பு முழுவதும் நோயுண்டாகப் பலவித தீக் குணங்களைப் பிறப்பிக்கும் ஒருவகைச் சிலேட்டும் நோய்
இக்கா பித்தம் ~ஓயாக்கொட்டாவி, வியர்வை, சுரம், மார்பெரிச்சல், தலை பாரம், தூக்கமின்மை முதலிய குணங்களோடு கூடிய பித்த நோய்
இக்கா நோய் ~மூன்று வகைத் தோடத்தினாலுண்டாகும் கொட்டாவி
இக்கி ~கிராம்பு, நறுவிளி மரம், கரும்பு
இக்கியாயம் ~அரசு
இக்கிரமம் ~வெட்பாலை
இக்குகண்டான் ~நீர்முள்ளி
இக்கு கந்தை ~நீர்முள்ளி, நெருஞ்சில், நாணல், வெள்ளை விருளிச்செடி
இக்குசா ~கத்தூரி மஞ்சள்
இக்குசாமதட்டை ~கரும்பு
இக்குசுண்டான் ~பெருங்கரும்பு
இக்குசு தருப்பை ~ஒருவகை தருப்பை
இக்கு மேகம் ~சிறுநீர் கரும்பு ரசத்தைப் போலும் தென்னங்கள்ளைப் போலும் மிகவும் இனிப்பாக நுரையுடன் இறங்கு மோர் மேகநோய்
இக்குரசம் ~கருப்பஞ்சாறு
இக்குரபிசம் ~நீர்முள்ளிவிரை
இக்குற மூலி ~பெருமருந்து
இக்டி ~கத்தூரிமஞ்சள், கரும்பு, அடிக்கரும்பு, கண்ணிமைமயிர்
இக்தி ~கிராம்பு
இங்கஞ் செடி ~முத்தாபலம் அல்லது சங்கஞ்செடி
இங்கலிகம் ~நஞ்சுண்டான், சாதிலிங்கம்
இங்களகம் ~இலிங்கம்
இங்கா ~காட்டுக்கொன்றை, கொடுக்காய்ப்புளி, இருள், வேல்
இங்காரியம் ~புகையிலை
இங்கி ~நெருஞ்சில், சுகாண்டன், நீர்முள்ளி
இங்கிக் கடம்பான் ~எட்டு மெல்லிய கைகளையுடைய ஒருவகை கடல் மீன்
இங்கிதராகம் ~கருங்குளவி
இங்கீதரோமம் ~தலைமயிர்
இங்கு அண்டா ~பெருங்கரும்பு
இங்குகாதி ~பீதரோகிணி
இங்குக் காண்டான் ~நீர்முள்ளி
இங்குசி ~நீர்முள்ளி
இங்குசுகண்டன் ~பெருநெருஞ்சில்
இங்குசு காண்டன் ~நீர்முள்ளி, பெருநெடுஞ்சில், பெருங்கரும்பு
இங்குசுக் காமணன் ~நீர்முள்ளி, நெருஞ்சில்
இங்கு சேபம் ~ஓடான்
இங்குடம் ~நாட்டுவாதுமை மரம்
இங்குடாவகம் ~நெருஞ்சில்
இங்குனம் ~பூதி மரம், இது காரீயத்தைச் செந்தூரமாக மாற்ற உதவும்
இங்குதம் ~ஒருவகை மரம்
இங்குதாநிபம் ~கருக்கு வாய்ச்சி
இங்குபத்திரி ~பெருங்காய மரத்தினிலை; நஞ்சுண்டான்
இங்குபோளம் ~கரியபோளம்
இங்குமை ~சாதிலிங்கம்
இங்குயில் ~பெருங்காயம்
இங்குரசாலிகம் ~ஒட்டுப்பலா
இங்குரா ~பெருங்காயம்
இங்குராப்பல்லி ~கிச்சிலிக்கிழங்கு
இங்குரமம் ~பெருங்காயம், பெருங்கரப்பு
இங்குரோமம் ~பெருங்காயம்
இங்குலாதிக் குளிகை ~விடசுரம், சுகசன்னி, சன்னி, பாதசுரம் முதலிய நோய்களுக்கும் கொடுக்கும் மாத்திரை
இங்குலிங்கபிசம் ~ஐவிரலி
இங்குலிசம் ~கருங்குங்கிலியம்
இங்கு லோசிதம் ~ஒட்டுமா
இங்குவாதிச் சூரணம் ~பெருங்காயம் முதலிய சரக்குகளைச் சேர்த்து வாத நோய் களுக்குக் கொடுக்கும் சூரணம்
இங்குவிருட்சம் ~நேயமரம்
இங்குளம் ~சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், காரச்செடி, சாதிலிங்கக்குப்பி
இங்குனி ~வெண்சிறுவழுதலை, சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், மொக்கப்பூமரம், கத்திரி
இங்குறாமம் ~பெருங்காயம்
இங்குனம் ~சாதிலிங்கம்
இங்கை ~இண்டங்கொடி (உப்பிலி)
இசதாரு ~கடப்பமரம்
இசபிமூலம் ~உரளி
இசப்பகோல் விரை ~இசுபகோல்விதை,
இசலிகா ~ஓட்டை மரம்
இசவேல் ~ஓடைவேல்
இசிகடுகு ~செங்கடுகு
இசிகா ~கருங்குருந்து
இசிதாரு ~கடப்பமரம்
இசிதாலிகம் ~ஒருதலைப் பூண்டு
இசிவு சன்னி ~உடம்பில் பலவிடங்கலிலுண்டாகும் வலிப்பு; வாய் கிட்டிப் போகுமோர் வகைவலி; வலி சன்னி நோயினால் மூளையும் அதைச் சேர்ந்த நரம்புகளும் பீடிக்கப்பட்டுத் தசைகள் பிகுவாகி அதனால் ஏற்படும் வலிப்பு
இசிவு நொப்பி ~சன்னியைத் தடுக்கும் மருந்து
இசிவு மாந்தம் ~குழந்தைகளுக்குச் செரியாமையால் ஏற்படும் வலி
இசீகா ~கடுகு
இசுக்கோல்வித்து ~இசுபகோல் விதை
இசுபகோல் விதை ~வெளியூரிலிருந்து கொண்டு வந்து பயிராக்கப்படும் ஒருவகை விதை
இசுபுட்பம் ~ஒருவகை பூண்டின் பெயர்
இசுபொங்கி விதை ~இசுகோல்விசை
இசுரதரு ~கடப்பமரம்
இசுரமூலி ~பெருமருந்து
இசுவேதனி ~நேர்வாளம்
இசெப்படிகை ~இண்டங்கொடி
இசையறி பறவை ~கேகயப்புள்
இசையிலொன்று ~துத்தம்
இசொரி ~பெருமருந்து
இச்சத்தி ~இலந்தை
இச்சபம் ~சவரிலோத்திரம், விளா
இச்சா நோய் ~பெண்களைப்புணர வேண்டுமென்ற ஏக்கத்தினால் அல்லது அதிகமாகப் புணருவதால் ஏற்படும் நோய்கள்
இச்சா பேதி ~தன் விருப்பத்திற்கேற்ப பேதி ஆக எடுத்துக் கொள்ளும் மருந்து (சக பேதி மருந்து)
இச்சாபேதிக் குளிகை ~சுகபேதி மாத்திரை
இச்சாமாமிச பேதி ~தன் விருப்பப்படி நடத்தவல்ல தசைப் பாகம்
இச்சாம் ~வெந்தோன்றி
இச்சாலியம் ~கொன்றை
இச்சியம் ~கடுகுரோகிணி, சவரிலோத்திரம்
இச்சியாமி ~சீயக்காய்
இச்சியாலம் ~அரசு
இச்சியோனி ~கரும்பு
இச்சிரோகிணி ~கடுகுரோகிணி
இச்சு ~ஈஞ்சு, கருப்பஞ்சாறு, சத்த சமுத்திரத்திலொன்று
இச்சுசாரம் ~வெல்லம்
இச்சுமூலம் ~கரும்புவேர், அடிக்கரும்பு
இச்சுமேகம் ~மூத்திரம் இனிப்பாக வரும் ஒருவகை மேக நோய்
இச்சுரசம் ~கரும்பு
இச்சுவாகு ~பேய்ச்சுரை
இஸ்காத்தி விருக்கி ~கண்டங்கத்திரி
இஸ்நானப் பரிகாரம் ~நான்குவகைச் சிகிச்சைகளிலொன்று
இஜருல்லயா ~விஷக்கல்
இஜரூல் கமர் ~சந்திர காந்தக்கல் (இதைச் சந்திரன் ஒளியிற் காட்ட ஈரங்கசியும்)
இஜரூல்திக் ~கோழிக்கல்
இஞ்சாகிசம் ~ஏலம்
இஞ்சிக்கிழங்கு ~இஞ்சிவேர்
இஞ்சிச் சத்து ~இஞ்சிக் கிழங்கின் சாரம் (இஞ்சியைச் சாராயத்தில் ஊறவைத்துப் பிறகு அதனின்று சாறு எடுப்பர்)
இஞ்சிச்சாறு ~இஞ்சிரசம், வெல்லம்
இஞ்சிச் சுண்ணம் ~இஞ்சிச் சாற்றினடியில் நிற்கும் சுண்ணாம்பு
இஞ்சி சுயரசம் ~இஞ்சியிலிருந்து எடுக்கும் கலப்பில்லாத ரசம்
இஞ்சி சுரசம் ~இஞ்சிச் சாற்றாகிய குடிநீர்; இதை இஞ்சி சுரசம் என்பர்
இஞ்சித் தயிலம் ~இஞ்சி ரசத்துடன் நல்லெண்ணெயையும் மற்ற கடைச்சரக்குகளை யும் சேர்த்து காய்ச்சி வடிக்கும் தயிலம்
இஞ்சிநீர் ~இஞ்சி ரசம்
இஞ்சிப் புளிப்பு ~காடியில் ஊற வைத்த கஞ்சி
இஞ்சியம் ~கீழாநெல்லி
இஞ்சி ரசாயனம் ~குன்மம் முதலிய வாயு நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து
இஞ்சிரை ~சங்கு
இஞ்சி லேகியம் ~இஞ்சியுடன் பிற கடைச்சரக்குகளையும் சேர்த்து நெய்யும் சர்க்கரையுமிட்டு கிளறிய இளகம்
இஞ்சி வேர்ப்புல் ~சுக்கு நாறிப்புல்
இஞ்சிறியர் ~கருஞ்சீரகம்
இஞ்சுச்சாறு ~வெல்லம்
இஞ்சோபிதம் ~ஏழிலைம் பாலை
இடகம் ~சங்குமுடி
இடரும் ~சங்குமுடி
இடக்காறை யென்பு ~இடது சவுடியெலும்பு
இடக்கைச்சி ~ஒருவகைநாடி
இடங்கணேயம் ~மயிலி
இடங்கப் பட்டை ~இலவங்கப்பட்டை
இடங்கலி ~வீழி
இடங்கனம் ~வெண்காரம்
இடசிடல் ~கடுகுரோகிணி
இடசு ~பால்
இடச்சுக்குளம்பு ~நீர்முள்ளி
இடதுசடரம் ~இதயத்தின் இடது அறை
இடது சிரவம் ~இதயத்தின் இடது பக்க மேல் அறை
இடது நாளக்குழல் ~இடது பக்கம் ஓடும் காரிரத்தக்குழாய்
இடதுபுப்புசம் ~இடதுபுப் நுரையீரல் இடது புசம் பக்கத்தின் பகுதி
இடபங்கம் ~புளிமா
இடபவனாதி ~கோஷ்டம்
இடபவாகன வேம்பு ~சிவனார் வேம்பு
இடபவித்து ~வாளம்
இடம்பால் ~மாட்டுப்பால்
இடம்புரிக் காய் ~திருகுகாய்
இடர்சிகம் ~மைசாட்சி
இடர்பிம்மம் ~தாது மாதுளை
இடர்ப் பில்லம் ~இமையின் அடியில் இருக்கின்ற நரம்புகளை மஞ்சள் நிறமாகச் செய்து சவ்வுவளர்ந்து தடிக்கச் செய்யும் நோய்; இமையின் ஓரங்களிலுள்ள மயிர்க்கால்களுக்குக் காணும் தாபிதம்
இடவயம் ~மலைப்பாலை (ஒருவகை மரம், இது குடசப்பாலையை ஒத்திருக்கும்)
இடவி ~சிப்பிமுத்து
இடறசம் ~குக்கில்
இடாபிம்மம் ~தாது மாதுளை
இடாடிமம் ~தாது மாதுளை
இடிகட்டு வாதி லேகியம் ~கடைச்சரக்குகளைப் பனை வெல்லத்துடன் சேர்த்து தயாரிக்கும் இலேகியம் இதை அதிசாரம், கிராணி போன்ற நோய்களுக்குக் கொடுக்கலாம்
இடிகரப்பன் ~ஒருவகைக் கரப்பான்
இடிக்கம் ~காட்டு வெள்ளாடு
இடிக்கொள் ~காட்டுக்கொள்
இடிசிகா ~கோங்கிலவு
இடிசிலைச் சாறு ~இலையை இடித்துப் பிழிந்த சாறு
இடிசுப்பீசம் ~நீர்த்முள்ளி
இடிசூலை ~மண்டையிடி, மண்டைகுத்தல்
இடிபிசம் ~இந்திரகோபப்பூச்சி
இடிப்புண் ~குத்தலோடு கூடிய புண், இடித்ததனால் ஏற்பட்ட புண்
இடிப்புற்று ~குத்தலோடு கூடிய புற்று நோய்
இடியிற் சார்ந்திடு நாதம் ~இந்திரகோபப் பூச்சி
இடிலேகியம் ~இடிகட்டுவாதி லேகியம்
இடிவம் ~பெருமருந்து
இடிவல்லாதி ~சேராங்கொட்டை, நீரடி முத்து, எள், பனை வெல்லம் முதலிய சரக்கு களைச் சேர்த்து தயாரித்த இளகம் (மேகப்படை, தேகப் புண், சொறி, சிரங்கு நீங்கும்)
இடிவாயு ~குத்தலோடு கூடிய வாயு
இடிவிலக்கி ~காந்தம்
இடுகாறி ~பேய்ப்பீர்க்கு
இடுகசீலம் ~மாட்டுக்குளம்படி
இடுகொள் ~காட்டுக்கொள்
இடுகௌசிகம் ~மான்குளம்படி
இடுக்குப்பானை ~கள்ளூறும் பனை
இடுக்கு மரம் ~எண்ணெயூற்றுமரம்
இடுபறம் ~பீர்க்கு
இடுபுடல் ~பேய்ப்புடோல்
இடுப்பரனை ~இடுப்பிலுண்டாகும் ஒருவகைப்படை
இடுப்புக் கடுவன் ~இடுப்பிலுண்டாகுமோர் வகைத் தோல் நோய்
இடுப்புச் சூலை ~வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவு வலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
இடுப்புப் பிடிப்பு ~ஒருவகை வாதநோய்
இடுப்பு முள்ளெலும்பு ~இடுப்பில் அமைந்துள்ள ஐந்து எலும்புகள்
இடுப்பு வாதம் ~இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
இடுப்புவிப் புருதி ~இடுப்பிலுண்டாகும் கட்டி
இடுப்புளைவு ~ இடுப்பில், வாதத்தினா லுண்டாகும் ஒருவித வலி; அளவு கடந்த புணர்ச்சியால் நேர்ந்த இடுப்பு வலி
இடும்பாகம் ~கொத்தான்
இடும்போகம் ~சிவப்பவரை
இடைக் காய்ச்சல் ~முறைக்காய்ச்சல்; இதைத் தினக் காய்ச்சல், மூன்றாம் பிறைக் காய்ச்சல், நான்காம் முறைக்காய்ச்சல் என்று மூன்று விதமாகச் சொல்வர்
இடைசுருகந்தம் ~கிராம்பு
இடைச் சூலை ~வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவுவலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
இடைத் தலைவலி ~விட்டு விட்டு வரும், தலைநோய்
இடைப்பரு ~ஒருவகைக் கரப்பன்
இடைப்புலி ~தும்பை
இடைமூளை ~நடுவிலுள்ள மூளை
இடையவியல் ~சதை உராய்வதால் ஏற்படும் படை
இடையுகரம் ~மகளிர் சூதகம்
இடையுற்ற மலடி ~பெண்களுக்கு இடுப்பு பருத்து அதனாலுண் டாகும் ஒருவகை மலட்டுத் தன்மை
இடைவழம் ~இந்துப்பு
இடைவிழு நாடி ~விட்டு விட்டு எழுவதும் அமிழ்வது மான நாடி நடை
இட்சாத்பகம் ~வேழக்கரும்பு
இட்சாவாகம் ~அம்பாளம், பேய்ச்சுரை
இட்சாவாகு ~பேய்ப்பீர்க்கு
இட்சி ~கத்தூரி மஞ்சள்
இட்சிகா ~எருக்கு
இட்சியகம் ~பிரபுண்டரீகம், அல்லித்தாமரை
இட்சுகந்தம் ~நெருஞ்சி, நிலப்பூசணி
இட்சு கந்தை ~பால்கமுகு, சிறுகரும்பு, நிலப்பூசணி, நெருஞ்சில், கானல் தருப்பை
இட்சு மேகம் ~சிறுநீர் கரும்புச் சாற்றைப் போலவும் தென்னங்கள்ளைப் போலவும் மிகவும் இனிப்பாக இறங்கு மோர் மேகநோய
இட்சுவம் ~கரும்பு
இட்சுவல்லி ~பூமிசர்க்கரைக் கிழங்கு
இட்சுவாகு ~பேய்ச்சுரை
இட்டகாட்டகம் ~வெட்டி வேர்
இட்ட கந்தம் ~வாசனை, வாசனைப் பொருள்
இட்டகாபதம் ~வெண்ணிறமான வெட்டிவேர்
இட்டாயிதம் ~ஆமணக்கு
இட்டிசம் ~ஆமணக்கு
இட்டும் ~பச்சைநாவி
இணகாலன் ~நேர்வாளம்
இணங்கியுரக்கூட்டி ~வழலை
இணங்குசம் ~பைசாசமுள்ளி
இணம் ~கிச்சிலி மரம், தளிர்
இணரம் ~மாமரம்
இணர்க்கிழங்கு ~கிச்சிலிக் கிழங்கு
இணர்ச்சேசிதம் ~ஒடுவை
இணர்மேலிதம் ~ஏழிலை வள்ளி
இணா ~மாமரம்
இணைகோணத் தடை ~மூக்கிரட்டையிலை
இணைக்கருப்பம் ~இரட்டைப் பிள்ளை
இணைதாரை ~விந்துவை வெளித்தள்ளும் தாரை
இணைப்பாம்பு ~சாரைப் பாம்பு, பிணையும் பாம்பு
இணைப் பிரியன் ~ஒருவகைப் பாம்பு
இணையுதி ~உடம்பினில் தசையிழைகளைப் பொருத்தும் பொருள்
இணை உப்பு ~இரண்டுவகை சேர்ந்த உப்பு; திராவகத்திலுள்ள நீர் வாயுவின் பாமரணுக்களைப் போக்கி அதற்குப் பதிலாகச் சேரும் இரண்டு வகைவுப்பு
இண்டங்கொடி ~இரண்டு
இண்டம் ~ஆமணக்கு
இண்டம் பொடி ~சவ்வரிசி நொய்
இண்டாசிதம் ~கசப்புப் புகையிலை
இண்டுகிதம் ~கசப்பு வெள்ளரி
இதயக பாடதாபிதம் ~ இதயத்தின் உட்பக்கத் திலுள்ள இரண்டு சதைக் கதவுகள்
இதயகவசம் ~இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
இதயகாளி ~சிறுதக்காளி
இதயகிரகம் ~நெஞ்சிலுண்டாகும் ஒருவிதப் பிடிப்புவலி
இதய கோசம் ~இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
இதயக்கழலை ~இதயக்கட்டி
இதயக்குவிப்பு ~இதயச்சுருக்கம்
இதயச்கூச்சு ~இதயமுனை
இதயசூலை ~மார்புவலி, வாயு அதிகரித்து மூச்சு விட முடியாது மார்பில் வலியையுண்டாக்கும் ஒருவிதக் குத்தல் நோய்
இதயட்டிகம் ~நறுஞ்சோந்தி (ஒரு வாசனை மலர்)