வரவேற்புரை

தொகு
 
 

வாங்க! George46

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
 
த*உழவன் 04:19, 18 ஏப்ரல் 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


நன்றி!

தொகு

த*உழவன் அவர்களுக்கு, மிக்க நன்றி! பயனுள்ள தங்கள் பரிந்துரைகள் பெரும் துணையாய் உள்ளன. தமிழ் சிறக்க உழைப்பதில் பெருமகிழ்ச்சி!--George46 03:53, 19 ஏப்ரல் 2010 (UTC)

 
George46:
1909வருடத்திய தமிழ் அகரமுதலி

உங்களின் முதற்பதிவினைக் கண்டேன். என்னிடம் மிகப்பழமையான அகரமுதலியொன்று உள்ளது. அதில் ஏறத்தாழ 30 பக்கங்கள், கிறித்தவச் சொற்கள் தனியாகத் தொகுக்கப் பட்டுள்ளன. அவைகளை விக்சனரியில் பதிவேற்ற உங்களுக்கு விருப்பம் உண்டா? அதன் மூலம் நீங்கள் இப்பகுப்பினை(பகுப்பு:கிறித்தவம்) விரிவுப்படுத்தலாம். ஆவலுடன் தங்கள் பதிலை எதிர்பார்த்து முடிக்கும், வணக்கம். த*உழவன் 05:55, 20 ஏப்ரல் 2010 (UTC)

கிறித்தவச் சொற்களைத் தமிழ்ப்படுத்தல்

தொகு

த*உழவன் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். தங்களுக்குத் தனி மின்னஞ்சல் அனுப்புகிறேன். நன்றி! --George46 17:28, 20 ஏப்ரல் 2010 (UTC)

  • ஜார்ஜ் அவர்களே! வணக்கம். தமிழ் விக்சனரிக்குத் தங்கள் வருகை குறித்து மகிழ்ச்சி. கிறித்தவப்பள்ளியில் நான் மூன்று ஆண்டுகள் படித்தபோது விவிலியத்தைத் தமிழில் படித்திருக்கிறேன். மிகவும் கவித்துவமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (எ. கா: பழமொழிகள், கொரிந்தியர் 1:13 முதலியன). விவிலியத்திலிருந்து நான் அவ்வப்போது விக்சனரியில் தமிழ், ஆங்கிலச் சொற்களுக்கு மேற்கோள்கள் இட்டும் வருகிறேன். நீங்கள் புதுச் சொற்களைச் சேர்க்கும்போது, கிறித்தவம் சம்பந்தமல்லாத சொற்களைச் சேர்க்கும்போதுகூட அவ்வாறு பக்கங்களைச் சேர்த்தால் (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பொருள் வருமாறு) மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நன்றி பழ.கந்தசாமி 19:04, 20 ஏப்ரல் 2010 (UTC)


  • திரு பழ.கந்தசாமி அவர்களுக்கு, நன்றி! விவிலிய மேற்கோள்கள் பல முறைகளில் அமையக்கூடும். "பேறுபெற்றோர்" என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். அதற்கு மேற்கோள் கீழ்வருமாறு காட்டப்படலாம்:
  1. மத்தேயு 5:3
  2. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்" (மத்தேயு 5:3)
  3. பேறுபெற்றோர்

--George46 20:54, 20 ஏப்ரல் 2010 (UTC) இவற்றுள் எம்முறை சிறந்ததென நினைக்கிறீர்கள்?

  • ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் - <English translation or the equivalent from a simplified English Bible> (பேறுபெற்றோர்) இப்படி வரவேண்டும் என்பது என் கருத்து. கூடவே, கிறித்தவ மதத்துக்கு மட்டுமே என்றல்லாத நிறையப் பொதுச்சொற்களும் விவிலியத்தில் நன்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது என் கருத்து. அவற்றைப் பொதுவான சொற்களுக்கு மேற்கோளாகவும் தரலாம். exalt, சோர்வு பக்கங்களைக் காண்க பழ.கந்தசாமி 23:04, 20 ஏப்ரல் 2010 (UTC)
  • தங்கள் கருத்தை வரவேற்கிறேன். தமிழிலோ ஆங்கிலத்திலோ எச்சொற்கள் விக்சனரியில் இன்னும் சேர்க்கப்பட வேண்டும் என்பதைக் கண்டுகொள்ள வழி உண்டா? --George46 04:52, 21 ஏப்ரல் 2010 (UTC)
  • நன்றி! இயன்ற அளவு பங்களிக்க முயல்கிறேன்.--George46 09:47, 21 ஏப்ரல் 2010 (UTC)
முனைவர் பவுல் வறுவேல் ஐயா, தாங்கள் காட்டும் அக்கறையும் ஆர்வமும் பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றது! கூடி உழைத்தால் கோடி செய்யலாம்! அன்புடன் --செல்வா 13:00, 21 ஏப்ரல் 2010 (UTC)
  • திரு செல்வா, பாராட்டுக்கு நன்றி! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.--George46 19:40, 21 ஏப்ரல் 2010 (UTC)

பகுப்புக்கான வேண்டுகோள்

தொகு
  1. பகுப்பு:இறையியல்
  2. பகுப்பு:ஆங்கிலம்-இறையியல்
  3. பகுப்பு:ஆங்கிலம்-கிறித்தவம்

போன்றவைகளைத் தேவைப்படும் இடங்களில் சேர்க்க வேண்டுகிறேன். தங்களது பங்களிப்புகள் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி. த*உழவன் 06:01, 25 ஏப்ரல் 2010 (UTC)

    • தங்கள் கோரிக்கையை நிறைவேற்றப் பார்க்கிறேன்.--George46 16:28, 25 ஏப்ரல் 2010 (UTC)

பகுப்பு+வார்ப்புரு+எழுத்துரு+இலக்கியம்

தொகு

நீங்கள் தொடர்ந்து பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் பங்களிப்பு மேலும் சிறக்க சில குறிப்புகளைத் தர எண்ணுகிறேன். அவை பின்வருமாறு;- 1)பகுப்பு

2)கடவுள் கிறித்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார் (உரோமையர் 5:18)-திருவிவிலியம்இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

3)திருவிவிலிய தளத்தின் எழுத்துருவினைப் பற்றிய குறிப்புகள் தந்தால், அதனை அனைத்து உரையாடல் பக்கத்திலும் இணைத்துவிடுவேன்.

4)தமிழிலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டுகிறேன். - (ஒப்புரவு)

5)<br>குறியீடுகளுக்கு பதிலாக ஒரு வரிவிட்டு எழுதினாலே, அந்த வசதியைப் பெற முடியும். இதனால் நமக்கும் தட்டச்சும் பணி குறையும்.

தங்களின் நேரத்தினைச் செலவிட்டமைக்கு, என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

-த*உழவன் 04:47, 14 மே 2010 (UTC)Reply

    • தாங்கள் அளித்த பயனுள்ள பல குறிப்புகளுக்கு நன்றி! ஒப்புரவு இடுகையில் வேறு பல பொருள்களையும் இணைத்து ஒத்திகை நடத்தியுள்ளேன். பகுப்பு எவ்வாறு செய்வதென்றும் கூறினீர்கள். திருவிவிலியத்தைப் பொறுத்த மட்டில் நான் பொதுவாகத் தருகின்ற இணைப்பு இது:திருவிவிலியம். அந்த இணைப்பில் விவிலிய மொழிபெயர்ப்புகள் பல உள்ளதால் பயனருக்கு நலமாகும் என்ற எண்ணம். நீங்கள் திருவிவிலியத்தைத் தரவேற்றுவது குறித்துப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டத்தில் Project Madurai உள்ள பாடம் பொருத்தமாகத் தெரிகிறது. நன்றி! --George46 14:05, 14 மே 2010 (UTC)Reply
  • ஒப்புரவு ஒத்திகையை கண்டேன். திருக்குறளுக்கான ஒரு புதிய தளத்தினையும் எனக்குப் புலப்பட்டது. நன்றி.

திருவிவிலியம் குறித்தத் தொடுப்புகள் எனக்கு ஆங்கில எழுத்துக்களாகத் தெரிகின்றன. அதனை படிக்க இயலவில்லை. எனவேதான் அதுகுறித்த எழுத்துருவைப் பற்றி வினவினேன். பொங்குதமிழ் மூலம், அது பாமினி எழுத்துரு என கண்டறிந்தேன். நான் முதலில் படித்த வரிகள் வருமாறு;-

mtH ,t;thW rpe;jpj;Jf; nfhz;bUf;Fk;NghJ Mz;lthpd; J}jH mtUf;Ff; fdtpy; Njhd;wp> "NahNrg;Ng> jhtPjpd; kfNd> ck;kidtp khpahit Vw;Wf;nfhs;s mQ;r Ntz;lhk;. Vnddpy; mtH fUTw;wpUg;gJ J}a Mtpahy;jhd;.

இப்படி தெரிந்த திருவிவிலியம், பொங்குதமிழ் மூலம் கீழ்கண்டவாறு அறிய முடிந்தது.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

அது பாமினி எழுத்துரு என திருவிவிலியத் தொடுப்புகள் உள்ள சொற்களின் உரையாடற் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும்.

உங்களிடம் உரையாடியதற்கு மகிழ்கிறேன்.த*உழவன் 00:26, 15 மே 2010 (UTC)Reply

பாமினி எழுத்துரு

தொகு

த*உழவன் அவர்களே, திருவிவிலிய வெளியிணைப்பு பாமினி எழுத்துரு என்பதை நான் கவனிக்கவில்லை. அதை எப்படியாவது சரிப்படுத்த வேண்டும். இன்னொரு நல்ல வெளியிணைப்பு ஒருங்கோடு எழுத்துருவில் உள்ளது. அது உங்கள் திரையில் சரியாகத் தெரிகிறதா என்று பார்த்து எனக்குத் தெரிவியுங்கள். சரிப்படுத்திவிடலாம். இதோ இணைப்பு: [1]. நன்றி! --George46 04:05, 15 மே 2010 (UTC)Reply

  • அருள்வாக்கு இணையம், நன்றாகத்தெரிகின்றது. இனி ஒருங்குறி எழுத்துருவில் உள்ள இத்தளத்தினையே பொருத்தமாக சுட்டுவீர்களென எண்ணுகிறேன்.என்னை <த*உழவனே> என்று அழைத்திட வேண்டுகிறேன். உடன்பதில் எழுத இயலாததற்கு வருந்துகிறேன்.த*உழவன் 23:34, 16 மே 2010 (UTC)Reply
  • த*உழவனே! அருள்வாக்கு இணையத்தை எல்லா இடுகைகளிலும் சேர்க்கிறேன். தங்கள் பணி சிறக்க! --George46 01:18, 17 மே 2010 (UTC)Reply

தங்களின் தொடர்ந்த பங்களிப்பு பேருவகை தருகின்றது

தொகு

ஐயா, தாங்கள் தொடந்து பங்களிப்பது பேருவகை தருகின்றது. ஒப்புரவு என்னும் பக்கத்தில் நான் செய்திருந்த சிறு மாற்றங்களைத் தாங்கள் பார்த்து போற்றியதற்கு நன்றி. --செல்வா 17:51, 14 மே 2010 (UTC)Reply

Pyx - நன்றி

தொகு

திரு. ஜார்ஜ், pyx என்பதை நன்கு மெருகேற்றியுள்ளீர்கள். அதற்கும், தங்கள் தொடர்பணிக்கும் நன்றி. பழ.கந்தசாமி 15:46, 25 மே 2010 (UTC)Reply

Pyx, Chalice - நன்றி!

தொகு
    • பழ.கந்தசாமி, தங்கள் பாராட்டுக்கு நன்றி! கிறித்தவம் தொடர்பான சொற்களுக்கு விளக்கம் அளிக்க முயல்கின்றேன். தங்கள் பணி சிறக்க!--George46 16:37, 25 மே 2010 (UTC)Reply

exploratorium

தொகு
  • exploratorium -ஆராய்வகம், ஆராய்வுக் காட்சியகம், ஆய்வுக் காட்சியகம்? உரையாடலாமா?

மொழியைக் குறிப்பிடும் தலைப்பு

தொகு

கிசுவாகிலி, ஆங்கிலம், பிரான்சியம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தரும்பொழுது, மொழியை மேலே குறிப்பிடுவது வழக்கம். அதற்கு நான் தேர்வு முயற்சியாக சில இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். உங்கள் கருத்துகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். ஆங்கிலத்துக்கு thou, கிசுவாகிலிக்கு mti,பிரான்சியத்துக்கு légume ஆகியவற்றைப் பார்க்கவும். --செல்வா 05:12, 29 மே 2010 (UTC)Reply

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு

தொகு

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

அனைத்து விக்கிக் கணக்கு

தொகு

 பவுல் என்றே இனி அழைக்கிறேன். அனைத்து விக்கிகளுக்கும் ஒரே பெயரை வைத்துக்கொள்ளலாமே? அவ்வசதியினைப் பெற,

மேலே காணப்படும் என்விருப்பத்தேர்வுகள் என்பதிலுள்ள,(Manage your global account) வசதியைச் சொடுக்கி, ஒரே பெயரில் அனைத்து விக்கிகளிலும் புகுபதிகை செய்யும் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.மேலும், இதன் மூலம் அப்பதிகையின் பதிவுகள் கவனிக்கப் படுகிறது.(த*உழவன் 01:31, 20 ஜூன் 2010 (UTC))

த*உழவன், பெயர் மாற்றும் முறை பற்றி தாங்கள் அளித்த வழிகாட்டலுக்கு நன்றி. முயன்று பார்க்கிறேன். --பவுல்-Paul 19:04, 20 ஜூன் 2010 (UTC)

  • இரண்டாம் முயற்சி வெற்றியாக முடிந்தது என நினைக்கிறேன். :)--பவுல்-Paul 20:13, 20 ஜூன் 2010 (UTC)

ministry - பயன்பாடு

தொகு

George46, உங்கள் பங்களிப்புகள் சிறப்பாக உள்ளன. மேலும் தொடர்ந்து விக்சனரியில் பங்களியுங்கள். நிற்க. ministry பக்கத்தில் நீங்கள் கொடுத்துள்ள பயன்பாடுகளைத் திருப்பணி பக்கத்தில் இடுவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக, ஆங்கிலச் சொற்றொடர்களை இடலாம் என்பது என் கருத்து. -- பரிதிமதி 18:05, 27 சூன் 2010 (இந்திய நேரம்)

    • தங்கள் பரிந்துரையை வரவேற்கிறேன். கேட்ட மாற்றங்களைச் செய்துவிட்டேன். நன்றி!--பவுல்-Paul 17:23, 27 ஜூன் 2010 (UTC)

நன்றி

தொகு

நிருவாகி வாக்கெடுப்பில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்தமைக்கு நன்றி. அங்கு பதிந்த உங்கள் கருத்துக்கும் நன்றி பல. --செல்வா 14:37, 26 ஜூலை 2010 (UTC)

  • நிருவாக அணுக்கம் தொடர்பாக உங்கள் ஆதரவு வாக்குக்கு நன்றி. தவறாமல் இயன்றவரை உங்கள் சிறப்பான பங்களிப்புகளைத் தொடரவும். பழ.கந்தசாமி 17:04, 26 ஜூலை 2010 (UTC)
  • பவுல், நிருவாக அணுக்கத்திற்கு வாக்கை நல்கியமைக்கு நன்றி. --பரிதிமதி 17:59, 26 ஜூலை 2010 (UTC)

நிருவாகப் பொறுப்பு பற்றி

தொகு

ஆமாம் ஐயா உங்களைப் பரிந்துரைத்தேன், ஆனால் ஏறத்தாழ எல்லா பணிகளையுமே இந்த நிருவாகப் பொறுப்பு இல்லாமலே செய்ய முடியும். உங்கள் விருப்பப் படியே இன்னும் சில காலம் சென்ற பின் மீண்டும் இது பற்றிப் பேசுவோம். உங்களுக்கு இருக்கும் பன்மொழி அறிவாலும், மிக நேர்த்தியாய் எதுவும் செய்யும் பாங்காலும் நீங்கள் அரும் பணியாற்ற இயலும். உங்களிடம் இருந்து நாங்கள் யாவரும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தொடந்து பங்களித்து பெருமை சேர்ப்பீர்கள் என்று திண்ணமாய் நம்புகிறேன். உங்களைப் போன்ற நல்லறிவாளர்களை விக்கி பெற்றிருப்பது பெருமை ஐயா.நன்றி. --செல்வா 01:32, 27 ஜூலை 2010 (UTC)

த.இ.ப. சொற்படிவம்

தொகு

த.இ.ப.சொற் பதிவுகளுக்கு முன்னுரிமைத் தாருங்கள். உங்களின் இறுதி கட்ட சொல்லினைத் தாருங்கள். அது 90% முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறேன். நன்றி. வணக்கம்--த*உழவன் 17:29, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

இறுதி முடிவுகள்

தொகு

பதிவேற்றத்தை அனுபவம் உள்ளவர்கள் முன்னின்று நடத்த தாமதம் ஏற்படுகிறது. நான் விரைந்து நடத்தவேண்டும் என்ற ஈடுபாட்டோடு , எனக்குத் தெரிந்த வகையில் கருத்துக்களை ஒருங்கிணைக்கிறேன். அந்த வகையில் // முடிவுகள் எடுக்கப்பட்டது// என்று எழுதியிருந்தேன்.அது பற்றி பதிலுரைத்துள்ளேன். அதிலும் பிழைவரின் சுட்டினால், அடுத்த முறை வராமல் பார்த்துக் கொள்வேன்.

முந்தைய வடிவத்தை பேச்சு:dado என்பதில் இட்டுள்ளேன். அவ்வடிவத்தை மாற்ற வேண்டி அவசியத்தை இங்குகூறியுள்ளேன். அதன்படி அம்மாற்றங்களை dado வில் ஏற்படுத்தியுள்ளேன். அது உகந்த வடிவமா? இல்லையா என்பதனை பிறரே முடிவு செய்ய வேண்டும்.

முதல்வரியான கொடிவரியில் மேலும் சிலர் கருத்திட்டுள்ளனர். அதில் இறுதியாக, கொடி பயன்பாடு குறித்துக் கூறியுள்ளேன். அங்கேயே உங்கள் கருத்தினையும் இட்டால் நன்றாக இருக்கும். எனக்காகக்(பேச்சு:dado2) கருத்திட்டமைக்கு நன்றி. த.இ.ப.பக்கத்தில் இறுதி தேதியினைக் குறிக்கக் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.--த*உழவன் 09:04, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Galician Hiligaynon என்ற மொழிகளின் தமிழாக்கம்

தொகு

Galician, Hiligaynon என்ற மொழிகளின் தமிழ்பெயர் என்ன என்பதனைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். இப்பக்கத்திலேயே குறிப்பிடுங்கள்.--த*உழவன் 18:00, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • ஆக்சுபோர்டு அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். Hiligaynon என்னும் மொழியை இலிகீனம் என்று தமிழில் கூறலாம். இது பிலிப்பின்சு நாட்டின் மாநில மொழிகளுள் ஒன்று ஆகும். காண்க: - Hiligaynon
  • Galician என்னும் மொழியைத் தமிழில் கலீசியம் எனலாம். இது எசுப்பானியாவில் பேசப்படும் ஒரு மாநில மொழி ஆகும். காண்க: Galician --பவுல்-Paul 03:45, 14 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • மிக்க நன்றி. மேற்கண்ட தமிழ் பெயர்களை உரியப் பக்கங்களில் இணைத்துவிட்டேன்.பகுப்பு:ஆங்கிலம்-மொழிகள் என்ற பகுப்பிலுள்ளவைகளுக்கு, தமிழ்பெயர்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். உருவாக்க வேண்டுகிறேன்.--த*உழவன் 00:51, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • த*உழவன், மொழிப்பட்டியல் மிக நீண்டுள்ளது. இருப்பினும், படிப்படியாக மொழிப்பெயர்களைத் தமிழாக்கம் செய்கிறேன். வாழ்த்துகள்! --பவுல்-Paul 04:07, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Mandarin

தொகு

en:Mandarin என்பதன் தமிழ் மொழிப்பெயர்ப்பை, மந்திரியம் என்று கூறலாமா? சீன மொழிகளில் ஒன்றான இதனை பரவலாகப் பயன்ப்படுத்துகின்றனர். உலகின் தொன் மொழிகளில் ஒன்றாக இருக்கும், இம்மொழியின் அடிப்படைச் சொற்களை, தமிழில் கொண்டுவர முயற்சிக்கிறேன். (எ. கா.) --த*உழவன் 05:32, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • மண்டரின் என்பதே அழகாக உள்ளது. மேலும், மண்டரின் என்பது விளக்காமலே mandarin என்றும் புரிந்துகொள்வர். மந்திரியம் என்றால், மந்திரம், மந்திரி என்ற வார்த்தைகள் ஏனோ மனதில் முன்வருகின்றன. பழ.கந்தசாமி 05:38, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • த*உழவன், பழ. கந்தசாமி, உங்கள் இருவரின் கருத்துகளுக்கும் அடிப்படை உள்ளது. Mandarin என்னும் சொல்லின் மூலம் "மந்திரி", மற்றும் mandar (= command) என்னும் போர்த்துகீசிய சொல் என்று கூறுகிறது இணைய வேர் அகரமுதலி. (காண்க: மண்டரின்). குழப்பம் தவிர்க்கும் பொருட்டு "மண்டரின்" என்பதைப் பொதுச் சொல்லாக வைத்துக்கொண்டு, மொழியைக் குறிக்க மட்டும் "மண்டரின் சீனம்" என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul 09:24, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • மயக்கும் மாயைக் கலைந்தது.மண்டரின் சீனம் என்றே பயன்படுத்துகிறேன். மற்றொன்று, மண்டரின் என்பதில், ஏன் நாம் இரண்டு சுழி னகரத்தைப் பயன்படுத்துவது இல்லை.? எனக்கு இந்த ஐயம், பல இடங்களில் அடிக்கடி வருகிறது. சிறுவர் என்னிடம் கேட்கும் போது, அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிக்கிறேன்.உண்மையில் இந்த அறியாமையாமை, என்னிடம் சிறுமயக்கத்தைக் கொடுக்கிறது.களையுங்கள்.--த*உழவன் 01:51, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா! இன்னலைத் தீர்க்க வா! நானறிந்த வரை 'ண்' 'd' உச்சரிப்புக்கு முன்னும், 'ன்' 't' உச்சரிப்புக்கு முன்னும் பயன்படுத்தப்படுகிறது. ன், t இரண்டும் நுனிநாக்குப் பக்க உச்சரிப்பு, ண், d இரண்டும் உள்ளுச்சரிப்பு என்பதால் என நினைக்கிறேன். காட்டாக: rend => ரெண்ட், rent=ரென்ட். பழ.கந்தசாமி 02:03, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • த*உழவன், ஏதோ "மந்திர" வேலை செய்து உங்கள் மயக்கத்தைத் தெளித்துவிட்டார் பழ. கந்தசாமி! ஆங்கிலச் சொற்களைத் தமிழ் வடிவத்தில் எழுதும்போது நீங்கள் குறிப்பிடுகின்ற சிக்கல் எழுவது இயல்பே. ஒரு பொது விதியாக nd = ண்ட், nt = ன்ட் என்றே கொண்டாலும், mount என்பது 'மவுன்ட்' என்றில்லாமல் 'மவுண்ட்' என்றே வழங்குகிறது. மேலும், இந்தியத் தமிழ் வடிவம் இலங்கைத் தமிழிலிருந்து வேறுபடுவதும் உண்டு. ஆக, தொடர்ந்து "சமாளிப்பதைத்" தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை!!--பவுல்-Paul 03:12, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply
(1) சீன மொழி மண்டரின் சமசுக்கிருதச் சொல் மந்திரி என்பதில் இருந்துதான் வந்தது (ஆனால் மலாய் போய் அங்கிருந்து போர்த்துகீசு பற்றி, பிறகு அங்கிருந்து mandarin ஆயிற்றாம் - ஆக்ஃசுபோர்டு அகராதி தரும் செய்தி). ஆனால் நாம் மண்டரின் என்று கூறுவதைச் சீனர்கள் Guānhuà (கு'ஆன்ஃகுஆ, கு'வான்ஃகுவா) என்கின்றனர். (2) தமிழில் நுனிநா "வல்லின" டகரமோ நுனிநா "மெல்லொலி டகரமோ" கிடையாது. தொல்காப்பியர் காலத்தில் இருந்தே இன்ன எழுத்துக்கு முன்/பின் இன்ன எழுத்துகள்தான் வரலாம் என்னும் வரையறைகள் உண்டு. இதன்படி டகர உயிர்மெய்க்கு முன் ஒற்று வருமாயின் அதன் (டகரத்தின்) இனமான மூன்றுசுழி ணகர ஒற்று மட்டுமே வரலாம். இரண்டுசுழி னகர ஒற்றை அடுத்து -ன்ட்- என்று எந்தத்தமிழ்ச் சொல்லிலும் வராது (ன் ஐ அடுத்து இனமான றகரம், புறமான ககரம், பகரம் வரலாம்) . இப்படியான விதிகளை தொல்காப்பியத்திலேயே காணலாம். பின்னர் விதிகளைச் சுட்டிக்காட்டுகிறேன் (வேறு யாரும் இடாவிடில்). இதனாலேயே பக்தி என்பது தவறு பத்தி என்பதே சரி. தி என்னும் வல்லின தகர உயிர்மெய்க்கு முன் அதற்கு இனமான ந், த் முதலானவையே வரலாம். இவை வெறும் தான்றோன்றித்தனமான விதிமுறைகள் அல்ல!! மிகுநுட்ப எழுத்தொலி அறிவால் எழுந்தவை (தமிழர்களின் நுட்பமானா மொழி அறிவுக்கு ஒப்பரிய எடுத்துக்காட்டாக விளங்குவன இவை). மிகு வியப்பு தருவன. "சமாளிக்கத்" தேவை இல்லை. பிறமொழிச்சொல்லாயினும் தமிழ் மரபுப்படி எழுதும்பொழுது இவற்றைப் பின்பற்றுவது இயல்பாகின்றது. மலையாளிகளில் பலரும் தமிழர்களிலும் பலரும் completely என்பதை combletely என்று கூறுவதற்குக் காரணம் ம் என்னும் ஒலிக்கு அடுத்து வரும் பகரம் மெலிந்து வரும் (தமிழ் ஒலிப்பு முறையின் இயல்பால்) (இதே போல simply -simbly). பகரத்துக்கு முன் ட், ண், ம், ன் முதலானவைதான் (இடையினத்தில் ர்) வரலாம். க்,ச் முதலான பிற ஒலிகள் வரலாகா. இவ்விதிமுறைகள் யாவும் நாவை அசைத்து ஒலியெழுப்பும் விதத்தில் ஒலிப்பு எளிமை நோக்கி நுண்ணிதின் அறீந்து உருவாகப்பட்ட மிக அருமையான விதிகள். --செல்வா 21:06, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தானியங்கிச் சோதனை-1

தொகு

இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவித்தால் அது மறுசீரமைப்பில் கவனத்தில் ஆலோசிக்கப்படும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:58, 8 அக்டோபர் 2010 (UTC)Reply

  • ஓரிடத்தில் விரிவாக த.இ.பக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, மேல் எண்1 பற்றிய குறிப்புகளை சோதனைச் சொற்களில் நீக்கிவிட்டேன். எனவே, ஆதரவுபகுதியில் அது பற்றிய குறிப்புகளை நீக்கினால் நலமாக இருக்கும்.எனவே, அக்குறிப்புகளை நீக்கக் கோருகிறேன். வணக்கம்.--த*உழவன் 01:27, 10 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:George46&oldid=1187830" இலிருந்து மீள்விக்கப்பட்டது