தமிழ்

தொகு
 
வழிபாடு:
முன்னோர் வழிபாடு-கொரியா தேசம்
 
வழிபாடு:
இசுலாமிய வழிபாடு
 
வழிபாடு:
இந்துக்களின் வழிபாடு
 
வழிபாடு:
பொங்கல் வழிபாடு
படிமம்:An inner view of Samparappan temple.jpg
வழிபாடு:
நாட்டுப்புற தெய்வ வழிபாடு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வழிபாடு, பெயர்ச்சொல்.
  1. வழியிற்செல்லுகை
  2. பின்பற்றுகை
  3. வணக்கம்
    (எ. கா.) பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர் (ஏகாம். உலா. 371).
  4. பூசனை (பிங். )
    (எ. கா.) இத்தளி வழிபாடு செய்வார்க்கு ((S. I. I.) i, 150).
  5. வழக்கம் (W.)
  6. சமயக்கோட்பாடு (W.)
  7. இறை வணக்கம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. proceeding on the way
  2. following
  3. reverence, adoration
  4. ritual, worship
  5. use, custom, habit
  6. religious system
  7. prayer
  8. worship

விளக்கம்

தொகு
  • இறைவன் உள்ளான் என்றும், வாழ்க்கைக்கான ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் போதிக்கும் எந்தவொரு சமயத்தினைச் சேர்ந்தவர்களும், அவரவர்கள் விருப்பப்பட்ட தெய்வங்களைக் கோவில்/பள்ளிவாசல்/மாதாக்கோயில்/தேவாலயம்/குருத்வாரா போன்ற பொதுவிடங்களிலோ அல்லது வீடுகளிலோ, ஏற்படுத்தப்பட்ட/பழக்கப்பட்ட நியம நியதிகளைப் பின்பற்றி பூசிக்கும்/ஆராதிக்கும்/வேண்டும் முறையே வழிபாடு ஆகும்...
  • வழிபாடு என்பது மதம், குலம், நாடு, இடம், குடும்ப பழக்க வழக்கங்கள் முதலானவற்றின் அடிப்படையில் பலவேறு வழிமுறைகளில் பின்பற்றப்படுகிறது...
  • வழிபாடுகள் சமயாசந்தர்ப்பங்களுக்கு அனுசரணையாக அதாவது பண்டிகை, திருநாள், உற்சவம், வீட்டு விசேடங்கள், தனிப்பட்ட பிரார்த்தனைகள்/வேண்டுதல்கள் ஆகிய நிகழ்வுகளுக்கேற்பவும் மாறுபடும்...

வாக்கியப் பயன்பாடு

தொகு
  • பெரும்பான்மை மக்கள் மன அமைதிக்காகவும், வாழ்க்கையில் கோரியதை அடைந்து இன்புற்றிருக்கவும், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் தொலைந்து நற்கதியை அடையவும் தெய்வ வழிபாடு அவசியம் எனக் கருதுகிறார்கள்.

 :(invocation)-(ஆராதனை)-(தொழுகை)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிபாடு&oldid=1969073" இலிருந்து மீள்விக்கப்பட்டது