விலாசு
பொருள்
விலாசு(வி)
- பிரம்பு, சாட்டை முதலியவற்றால் வலுவாக அடி
- பந்தை மட்டையால் பலமாக அடி
- முழுதும் தோல்வியடையச் செய்
- சிறப்பாகச் செய்
- அழகுற அணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- beat soundly; thrash; flay
- hit a ball forcefully with the bat
- rout; defeat out and out, as in a discussion
- perform something excellently
- put on attractively
விளக்கம்
பயன்பாடு
- வாதத்தில் எதிரியை விலாசிவிட்டான்
- சண்டையில் நன்றாக விலாசிவிட்டான்
- முதுகில் பிரம்பால் நான்கு தரம் விலாசினான். மோகனுக்கு அவமானமாய்ப் போய்விட்டது! (என் விழியில் நீ இருந்தாய்!, ஜெயபாரதன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விலாசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +