இடிபாடு
இடிபாடு (பெ)
- கட்டிடம் முதலியன இடிந்துபோன மிச்சம்; அழிபாடு; சிதைவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நில நடுக்கத்தால் நொறுங்கி விழுந்த கட்டிட இடிபாடுகளிலும் ஏராளமானவர்கள் சிக்கி உள்ளனர்.
- கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது.
- பழைய பொற்காலத்தின் தொல்பொருள் சின்னமாக எஞ்சும் ஒரு இடிபாடு அவர். (ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம், ஜெயமோகன்)
- தமிழகப் பகுதியை கேரளத்தில் இருந்து பிரிக்கும் பெரிய கோட்டையை திவான் அய்யப்பன் மார்த்தாண்டன் கட்டினார். .... செங்கல்லும் வெட்டுக்கல்லும் கொண்டு கட்டப்பட்டது. இதை ஆங்கிலேயர் இடித்து கட்டிடங்களும் தேவாலயங்களும் கட்டினார்கள். பல இடங்களில் இதன் இடிபாடுகள் இன்றும் உள்ளன. (இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இடிபாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இடி - சிதைவு - சேதாரம் - அழிபாடு - அழிவுச்சின்னம்