ஏ
ஏ(பெ)
ஒலிப்பு (கோப்பு)
பொருள்
- நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒரு மொழி
- ஏ என்பது, உயிர் எழுத்துக்களில், 8வது எழுத்தாகும்.
- ஏ = அம்பு (பெயர்ச்சொல்)
- ஏ = ஏவு (வினைச்சொல்)
- ஏ - (இடைச்சொல்)
- ஏ = பெருமை "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் உரியியல் (உரிச்சொல்)
- ஏ என்பது, விளிச்சொல்லாகவும் பயனாகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the eighth tamil vowel,
- arrow
- activate
- an addenda in nouns to express the moods of certainty, questioning, negative, clarity, threatening, counting,
- the greatness
- hey.
விளக்கம்
இடைச்சொல்
தொகு- ஏ இடைச்சொல் 5 பொருளில் வரும் (தொல்காப்பியம் 2-7-9)
- ஈற்றசை
- கடல் போல் தோன்றல காடு இறந்தோரே (அகநானூறு 1)
- எண்
- நிலனே நீரே தீநே வளியே வெளியே
- தேற்றம்
- அவனேஎ கொண்டான்
- பிரிநிலை
- அவனே கொண்டான்
- வினா
- நீயே மொண்டாய்?
- தெளிவு (அளபெடுக்கும்) (தொல்காப்பியம் 2-7-13
- நீயேஎ கொண்டாய்
- எண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் (தொல்காப்பியம் 2-7-40
- தோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்கு ஐம்புலனெ என மொழிப
- எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் (தொல்காப்பியம் 2-7-42
- சாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்.
- ஏ - (அன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
- அன்று ஈற்று ஏ - அன்றே அன்றே
- ஏ – (நன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
- நன்று ஈற்று ஏ - நன்றே நன்றே
- ஏ – அசைநிலை (தொல்காப்பியம் 2-7-24
- ஏஎ அம்பல் மொழிந்தனம் யாமே
- ஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து (தொல்காப்பியம் 2-7-38
- கடல்போல் தோன்றல காடு இறந்தோரே
உரிச்சொல்
தொகு- பொருள்
-
- பெற்று என்னும் பெருமை
- இலக்கணம்
-
- "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் 2-8-7
- இலக்கியம்
-
- ஏ கல் அடுக்கம் (நற்றிணை 116)
- விளக்கம்
-
- ஏ < ஏற்றம் < ஏறு
மொழிபெயர்ப்பு
தொகு- greatness (ஆங்கிலம்)
- பிறமொழி
-
- இந்தி மொழியின் ஏ = ऐ
பயன்பாடு
(எ.கா.) ' ஏ, அங்க பார்!.' - ' hey, look there ! '
- ( லக்கணக் குறிப்பு) ஏ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகையினைச் சார்ந்ததாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஏ என்ற எழுத்தினால் ஆரம்பமாகும் திருக்குறள்கள் மொத்தம் =9. - இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- A = a = ஏ = ऐ ஆகியவற்றின் பலுக்கல்கள் ஒன்றே ஆகும். (எ.கா.) april , ஏரி.
:(ஐ), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).