ஒருக்களி
ஒருக்களி(வி)
- ஒருபக்கமாய்ச் சாய்; பக்கவாட்டில் திரும்பியிரு
- ஒருச்சரி; சற்றுக் கோணலாக அல்லது பக்கவாட்டில் சாய்த்து வை
- கொஞ்சம் திற/திறந்திரு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கைமீது தலை வைத்து ஒருக்களித்து சிறிது நேரம் படுத்திருந்தான். (மோந்தோபிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா)
- ஒருக்களித்து இருந்த கதவை மெல்லத் திறந்தான். (சிலந்தி, மதியழகன் சுப்பையா)
- கதவு வெகு இயல்பாய் ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது அவரது சந்தேகத்தை மேலும் கிளற, அவர் அந்தக் கதவருகே மெல்ல பதுங்கினார். உள்ளே பார்க்க முடியவில்லையே தவிர அந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது தெளிவாகக் கேட்டது. (நெடுஞ்சாலைக் காதல், ராம்ப்ரசாத்)
- ஒருக்களித்து வைத்த கட்டில். (விலகாத உறவு, ஹேமா)
- கனகமணிக் கட்டிலில் கலர்ப் பூக்கள் கொட்டிய மெத்தையின் மேல் ஒரு நேரம் ஒருக்களித்தும்; மறுநேரம் மல்லாந்தும் படுத்தும் புரண்டும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் கதாநாயகி காதலனை நினைத்துப் பாடுகிறாள். (வாலியின் நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், 21-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒருக்களி--- DDSA பதிப்பு + வின்சுலோ +