கணுக்கால்
கணுக்கால் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கணுக்கால் மேலே சன்னமான கொலுசு அணிந்திருந்தாள்.
- நீல நிற பட்டாடை சற்றே உயர்ந்து கணுக்கால் தெரிய இருந்ததால், வெள்ளிக் கொலுசு பளீரென தெரிந்தது.
- கணுக்கால் வலி
- அவனுடைய கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால் புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது! (பொன்னியின் செல்வன், கல்கி)
- ஓடைத் தண்ணிக் கசிவு, அந்தச் சேரியின் சந்து பொந்தெங்கிலும் கணுக்கால் உயரத்துக்குப் பரவியிருந்தது (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம் )
- தண்ணீர் உறைபனி மாதிரி காலை வெட்டியது. அதனால் அவர்களது கணுக்கால் வலித்தது; பாதம் மரத்துப் போயிற்று. சில சமயம் தண்ணீர் முழங்கால் வரை நனைத்தது. எதிர்பாராத ஆழம் அவர்களைத் தள்ளாட வைத்தது (உயிர் ஆசை, ஜாக் லண்டன், புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கணுக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கால் - கெண்டைக்கால் - பாதம் - தொடை - முழங்கால்