குரும்பை
பொருள்
குரும்பை(பெ)
- தெங்கு பனைகளின் இளங்காய்
- இரும்பனையின் குரும்பை நீரும்(புறநா. 24, 2)
- இளநீர்
- குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை (கல்லா. 52,8).
- குரும்பி; புற்றாஞ்சோறு
- பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277).
- பெருங்குரும்பை
- காதினுள் திரளும் குறும்பி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- young, unripe fruit of a palmyra or cocoanut palm; immature coconuts or palmyra nuts; fruit buds
- young coconut
- comb of white ants' nest;
- bow-string hemp
- earwax
விளக்கம்
பயன்பாடு
- குரும்பை என்பது தெங்கின் இளம்பருவத்துக் காய். கொச்சங்காய் என்போம் நாஞ்சில் நாட்டில். கொச்சு எனில் சிறிய எனப் பொருள்.(சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குரும்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +